துவரம்பருப்பு தோசை

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - 50 கிராம் (1/4 ஆழாக்கு)
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புழுங்கலரிசி - 2 ஆழாக்கு


 

அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் காலையில் தோசை வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள சரஸ்வதி அவர்களுக்கு,

இவ்வளவு விரைவாக சதம் அடிசிட்டீங்க. அதுக்கான என் வாழ்த்துக்கள பிடிங்க :-).

அரிசி எவ்வளவு போடனும்? அப்புறம் துவரம் பருப்புக்கு பதில் பயித்தம் பருப்பு உபயோகிக்கலாமா?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
நன்றிம்மா. எழுத்துதவியில் புழுங்கலரிசி 2ஆழாக்கு என்று எழுதியிருந்தேன். ஆனால் ரெசிபியில் பேஸ்ட் பண்ணும்போது எப்படியோ விட்டுப்போய் விட்டது. கண்டுபிடித்து எழுதியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்தியதற்கும் நன்றிம்மா. பாசிபருப்பு போட்டு நான் செய்ததில்லை. தாங்கல் முயற்சி செய்து பாருங்களேன்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

ரொம்ப நல்லா வந்தது, துவரம் பருப்பு தோசை :-). பயித்தம் பருப்பு தோசை பெசரெட்டு போல தான் இருந்தது. அதையும் ட்ரை பண்ணி பாத்தேன்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தோசை செய்து பாரட்டியமைக்கு நன்றி. பயத்தம்பருப்பு தோசை பெசரட் டேஸ்ட்தான் இருந்தது என்று எழுதிருந்திர்கள். பயத்தம்பயறில் சுடுவதுதான் பெசரெட். அந்த சுவைதான் இருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை