சிவப்பரிசி பணியாரம்

தேதி: December 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிவப்பரிசி - 2 ஆழாக்கு (400 கிராம்)
உளுந்து - அரை ஆழாக்கு (100 கிராம்)
பால் - 100 மில்லி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மைய அரைக்கவும். உப்பு சேர்த்து, சர்க்கரை, பாலையும் சேர்த்து கரைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தட்டையான கரண்டியால் மாவை ஊற்ற வேண்டும். திருப்பிபோட்டு வெந்தவுடன் எடுக்கவேண்டும்.


தட்டையான கடாயில் ஊற்றினால் 2 அல்லது 3 பணியாரமாக ஊற்றலாம். இல்லையென்றால் ஒவ்வொரு பணியாரமாகத்தான் ஊற்ற வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்