மாங்காய் ஊறுகாய் (இனிப்பு)

தேதி: December 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 2 சுமாரானது
வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிது
உப்பு - சிறிது
சீனி அல்லது வெல்லம் - தேவையான அளவு


 

முதலில் மாங்காவை தேலை நீக்கிவிட்டு பெரிய துண்டுகளாக தகடு போல் வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.

கருவேப்பிலையையும் நறுக்கிக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், வெங்காயம்,கருவேப்பிலை,பச்சைமிளகாய் போட்டு வதக்கி மாங்காய் துண்டுகளை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.

நன்றாக வெந்த பின்பு கரண்டியால் நன்கு மசித்துவிட்டு தேவையான அளவு சீனி அல்லது தட்டிய வெல்லம் போட்டு கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்


மாங்காய் நன்கு கூல் போல ஆன பின்பு தான் சீனியை சேர்க்க வேண்டும்.

இந்த ஊறுகாயில் புளிப்பு, காரம்,இனிப்பு உப்பு எல்லா சுவைகளும் சேர்ந்து மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்