தேங்காய் பால் சாதம்

தேதி: December 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிரியாணி அரிசி - 400 கிராம்
சிறிய தேங்காய் - ஒன்று
வெங்காயம் - 2
உப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
தூளாக்கவும்:
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - 3


 

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தூளாக்கியவற்றை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வாசனை (பூண்டு) போகுமளவிற்கு வதக்கவும்.
தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ளவும். 4 கிளாஸ் பாலை வதங்கியவற்றில் ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சேர்க்கவும்.
அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். கொதித்தவுடன் அரிசியை கழுவி போட்டு கொதித்தவுடன் சிறுதீயில் மூடி வேகவிடவும். 10 நிமிடத்தில் வெந்துவிடும். நெய் விட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்