புரோக்கோலி கூட்டு

தேதி: December 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரோக்கோலி - கால் கிலோ
முழு பூண்டு - ஒன்று
வெங்காயம் - கால் பாகம் (சிறிய துண்டு)
எண்ணெய் - 2 அல்லது 3 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
தண்ணீர் - கால் கப்
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி


 

புரோக்கோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்று தடிமனாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோக்கோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.
புரோக்கோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும். வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.


வேக வைப்பதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. புரோக்கோலியின் பச்சை நிறம் மாறாமல் வேகவைக்கவேண்டும். அப்போதுதான் சுவையாகவும் சத்துக்கள் குறையாமலும் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அஸ்மா மேடம்,

பூண்டு பெரியது 1 என்று சொல்லி இருக்கிங்க, அது ஒரு பல்லா இல்லை ஒரு முழு பூண்டா

பூண்டு என்று எழுதும்போதே நினைத்தேன், ஒரு பல்லா அல்லது முழு பூண்டான்னு சந்தேகம் வருமோன்னு. அதற்காகத்தான் செய்முறையில் 'பூண்டு பற்களை'ன்னு பன்மையில் போட்டேன். நீங்கள் கேட்டது பற்றி பரவாயில்லை. இப்போது 'முழு பூண்டு'ன்னு மாற்றிவிடுகிறேன். :) ஓ.கே.?

ஓகே இனி புரோக்கோலி கூட்டு செய்துட வேண்டியதுதான்:-)

ஹாய் அஸ்மா மேடம்,

இன்று எங்கள் வீட்டில் உங்களது புரோகோலி கூட்டு தான் நல்லா சுவையாக இருந்தது.இந்த குறிப்பு எங்களுக்காக கொடுத்தற்க்கு மிக்க நன்றி.

செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி!

தங்கள் குறிப்பை செய்து பார்தேன். அருமை

ஹாய் அஸ்மா! இன்று உங்கள் புராக்கொல்லி கூட்டு சமைத்தேன்.
நான் சும்மா அவித்துத்தான் சாப்பிடுவேன். உங்கள் சமையல் புதுவிதமாக
இருந்தது. நல்ல சுவையாகவும் இருந்தது.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.