பல் ஈறுகளில் இரத்தம்

ஒன்பது வயது பையனுக்கு பல் தேய்த்தால் பல் ஈறுகளில் இருந்து இரத்தமாக வருகிறது. இரத்தம் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்லுங்களேன்.

ஹாய் செம்பருத்தி,
கடுக்காயை பொடி செய்து பல் துலக்குவது போல் பல்லில் காலை, மாலை இருவேளை தேய்த்து வந்தால் பல்லில் இரத்தம் வருவது நிற்கும். இரத்த சோகை இருந்தாலும் அவ்வாறு வரும். ஹீமோகுளோபின் அளவு பார்க்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அக்கா(அக்கா-ன்னு கூப்பிடலாம்ல),
நலமா?.நீங்க தந்த பதிலிற்க்கு மிக்க நன்றி.
முதலில் கடுக்காய் பொடியை பல் தேய்த்து பார்க்கிறேன்,அப்படியும் நிக்கலேன்னா டாக்டர் கிட்ட காண்பிக்கலாம்

கடுக்காய் பொடி எங்கே கிடைக்கும் நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா?.

கடுக்காயிற்க்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?.

கடுக்காய் பொடியும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். இல்லைன்னா, கடுக்காயாக வாங்கி நாமே கூட காய வைத்து பொடி செய்து கொள்ளலாம். இங்கன்னா பொடியே கிடைக்குது.
ஆங்கில பேர் தெரியலம்மா.
தாராளமா அக்கான்னு கூப்பிடலாம்.

அன்புடன்,
செல்வி.

சரிக்கா இங்கே நாட்டு மருந்து கடைகளில் கேட்டு பார்க்கிறேன்

அன்புள்ள செம்பருத்தி, உங்கள் மருமகன்(அவருக்குதானே கேட்கிறீர்கள்) பற்களின் ஈறுகளிலிருந்து ரத்தம் வருவதற்கு செல்வி அக்கா சொன்ன முறையை செய்து பார்க்கவும்.

அப்படியும் நிற்கவில்லையென்றால் பல் மருத்துவரிடம் செல்வதே நல்லது. சிலசமயம் பற்களை க்ளீன் செய்தால் ரத்தம் வருவது நின்று விடும். ஆனால் வருடத்திற்கு இரண்டு முறையாவது பற்களை க்ளீன் செய்யவேண்டும்.

பெரியவர்களோ அல்லது சிறியவர்களோ பல்லின் ஈறுகளில் இருந்து ரத்தம் வருவதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது பிறகு வேறு ப்ரச்சனைகளில் கொண்டு போய் விட்டு விடும். அதனால் செம்பருத்தி,அவசியம் குழந்தையின் பற்களை கவனிக்கவும்

நலமா? கடுக்காய் ஆங்கிய பெயர் Myrobalan.ரொம்பா இரத்தம் வந்தால் டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகவும். என்ன சொன்னார்கள் என்று தெரியபடுத்தவும்.

ஜானகி

பல்லில் ரத்தம்
குழந்தைகளுக்கு பல் ஈறுகளில் ரத்தம் வந்தால் உலர்ந்த திராட்சை பழங்களைத் தன்ணீஈர் விட்டு கொதிக்க வைத்து, இலம்சூட்டோடு அருந்த கொடுத்தா, பல் ஈறுகளில் ரத்தம் வருவது மற்றும் ஈறுகள் நிறம் மாறியிருப்பது போன்றவை குனமாகும்.
ஜலீலா

Jaleelakamal

நலமா?.குழ்ந்தைங்கல்லாம்(விபா,வினீத்)எப்படி இருக்காங்க?.
ஆமம் எனது குட்டி மருமகனுக்கு தான் இந்த பிரச்சனை,செல்வி அக்கா சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் அப்படியும் கேக்கலேன்ன டாக்டர்கிட்டை காண்பிக்கிறேன்

ஹாய் ஜானகி மேடம்,
நலம்,நலமறிய ஆவல்.கடுக்காயின் ஆங்கில பெயர் தந்தற்க்கு மிக்க நன்றி.கடுக்காய் பொடி தேய்த்து பார்க்கிறேன் அப்படி கேக்கலைன்ன டாக்டர் கிட்டதான் போகனும்,டாக்டர் கிட்ட கான்பிச்சுட்டு டாக்டர் என்ன சொன்னாங்கன்னு சொல்றேன்.

ஹாய் ஜலீலா அக்கா,
நலமா?.உங்க பையன் இப்ப எப்படி இருக்காங்க,
தாங்கள் பதிலிற்க்கு மிக்க நன்றி.
இந்த குறிப்பையும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்