இஞ்சி துவையல் -3

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இஞ்சி - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
உப்பு - கால் தேக்கரண்டி


 

இஞ்சியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மிளகு, பெருங்காயம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியையும் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, வறுத்து வைத்தவை, புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து தாளித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்