தேதி: December 13, 2007
பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சேணைக் கிழங்கு -- 100 கிராம்
எண்ணைய் -- 1/2 கப்
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் வத்தல் -- 8 என்னம்
சீரகம் -- 1 டீஸ்பூன்
தனியா -- 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசலா தூள் -- 2 சிட்டிகை
சேனைக் கிழங்கை கேரட் துருவியில் துருவி உப்பு சேர்த்து தனியே வைக்கவும்.
வத்தல்,சீரகம்,தனியா இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
பிசிறி வைத்த சேணைக் கிழங்கை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.
வாணலியில் கொஞ்சம் அதிகமாக எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி அதனுடன் சேணைக் கிழங்கை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
அதனுடன் பொடித்த பொடியை தூவி மேலும் சிவக்க மொறு மொறுப்பாக வெந்ததும் கரம் மசாலா தூள்,தேங்காய் துருவலை தூவி மேலும் வதக்கி இறக்கி பறிமாறலாம்.
பொடிமாஸ் ரெடி.