சாம்பார் பொடி தாளிப்பு

தேதி: December 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
பூண்டு -- 5 என்னம் (தோலுடன் நசுக்கியது)
நல்லெண்ணைய் -- 1/2 கப்
உப்பு -- ருசிக்கேற்ப


 

முதலில் சாம்பார் பொடியில் உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி நசுக்கிய பூண்டை போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் கரைத்த சாம்பார் பொடி ஊற்றவும்.
நன்கு கொதித்து எண்ணைய் மேலே மிதக்கும் வரை காய்ச்ச வேண்டும்.
சாம்பார் பொடி தாளிப்பு ரெடி.


சாம்பார் பொடி கரைசல் நீராக இருக்கவேண்டும்.இல்லை எனில் கறுத்து நன்றாகவே இல்லாமல் போய் விடும்.
கோதுமை தோசையுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்