எல்லாருக்கும் ஒரு முக்கியமான, இனிய செய்தி!!!!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்....
நம்ப முடியவில்லை, வில்லை, ல்லை, லை!!!
நம்ம அட்மின், சகோதரர் பாபுவுக்கு கடந்த வியாழன் அதாவது டிசம்பர் 13-ந்தேதியன்று திருமணம் இனிதாக நடந்தேறியது.

வாழ்த்துபவர்களும், பரிசு அனுப்புபவர்களும் (!) தங்கள் வேலையைத் துவங்கலாம்.

முதன் முதலில் இந்த செய்தியை சொன்னதற்காக என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்கப்பா :-))

பொண்ணு யாருன்னு சொல்லலையே? எல்லாருக்கும் தெரிஞ்ச பொண்ணுதான்! இருக்கட்டும், மெதுவா சொல்றேனே!! இப்ப என்ன அவசரம்!!! எல்லாத்தையும் ஒண்ணா சொல்றதுன்னா எனக்கு மூச்சு வாங்குது. அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சொல்றேனே!!!
முதல்ல வாழ்த்திடுவோம்.
அன்புடன்,
செல்வி.

எனதருமை தம்பி பாபுவுக்கு,
இனிய திருமண நல்வாழ்த்துகள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ அன்பு சகோதரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். சம்சார சாகரத்தில் மூழ்கி, முத்துக் குளிக்க தயாராகுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பாபு அண்ணாவிற்கு,
இனிய திருமண நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
அபிராஜன்

Jaleela Kamal
பாபு தம்பிக்கு
ஜலீலாவின் திருமண நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும், நல்லமும் பெற்று சேரும் சிரப்பு மாய் வாழ ந்ன் வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள பாபு அண்ணனுக்கு,
வாழ்வில் எல்லா வளமும் பெற்று இனிதாய் அமைய இந்த தங்கையின் வாழ்த்துக்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்போ வாழ்த்துவோம்னு எல்லோரும் ஆவலா இருந்தோம், என்ன இப்படி சொல்லாம கொள்ளாம கப்சிப்பென்று கல்யாணத்தை முடிச்சிட்டீங்க!!!? அதுதான் கொஞ்ச நாளா அறுசுவையில் உங்க அட்ரஸே இல்லையா?:) கல்யாண ஏற்பாட்டில் அறுசுவையை கவனிக்க முடியலயோ?

உங்க (&அறுசுவை) பிறந்த நாளைக்கு வந்து கலந்துக்கொண்டார்கள் என்பதற்காக செல்வி மேடத்திற்கு மட்டும் சொல்லியிருக்கீங்களா? அவங்க வேற, பொண்ணு யாருன்னு சொல்லாம "எல்லாருக்கும் தெரிஞ்ச பொண்ணுதான்!"ன்னு சஸ்பென்ஸ் வெக்கிறாங்க! இதெல்லாம் நியாயமாண்ணா? சரி, வாழ்த்த வந்த இடத்தில் முதலில் குறையா சொல்றீங்களேன்னு சொல்லிடாதீங்க!

வாழ்வின் எல்லா வளமும் குறைவில்லாமல் பெற்று, நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.

அண்ணா சர்ப்ரைஸ்!!!!!!!!!!
அண்ணா இன்விடேஷ்ன் கூட இல்லாமல் எப்படி?
நான் சண்டை போடத்தான் வந்தேன்..
எப்படி எங்களுக்கு சொல்லாமல் ..
உங்க கூட கா..
அண்ணிய கேட்டதா சொல்லுங்க..
அண்ணி நல்லா சமைப்பாங்களா????
இன்னும் கேள்வி தொடரும்..

அண்ணிக்கு பயங்கரமான ராகிங் இருக்கு...
ரெடியா இருக்க சொல்லுங்க...

செல்வி மேடம்......! சீக்கிரம் சொல்லிடுங்க ப்ளீஸ்! எங்கே சஸ்பன்ஸ் வெச்சா எல்லோரும் ரொம்ப ஆவலா இருப்போமோ அங்க போய், தெரிஞ்ச பொண்ணு என்று நீங்க கமா போட்டவுடன் அறுசுவை டீமில் உள்ள ஒவ்வொரு முகமா கண்ணுக்கு தெரிகிறது. :) ரொம்ப குழப்பாதீங்க செல்வி மேடம்! சொல்லுங்க..சொல்லுங்க...ஒன்....டூ...த்ரீ... சீக்கிரமா சொல்லுங்க வெயிட் பண்ணிட்டிருக்கேன்...

என்னடா அறுசுவை அடம்பிடிக்கும் போது அட்மினை இந்த பக்கம் பார்க்க முடியாததற்கு காரணம் இதுதானா???????????எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.அட்மின் நிஜமாக என்னால் நம்பமுடியவில்லை.ஏனென்றால் திருமணம் பற்றிய பேச்சு வந்தால் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் பேசுவீர்கள்.பார்த்தீர்களா!!!!!
ஆண்டவன் படைப்பில் அனைவருக்கும் ஒரு துணை படைத்திருப்பார்.தாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.தாங்களே இந்த இனிய அறிவிப்பை அழைப்பிதழுடன் தெரிவித்து இருந்தால் மிகவும் சந்தோஷமா இருந்திருக்கும்.பரவாயில்லை

நம்ப முடியவில்லை.என்னடா ஆலேயே கானோமேன்னு நினச்சா ....இன்ப அதிர்ச்சி.எங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.வருத்தமா இருக்கு.பரவாயில்லை அண்ணா.செல்வி நீங்கள் தெரிவித்தது மிகுந்த சந்தோஷம்.பொன்னு யாருன்னு தயவு செய்து சொல்லுங்கலேன் செல்வி.யார் யாரோ என் கண்ணுக்கும் வராங்க.
வாழ்க்கையிலே எல்லா வழங்கலும் பெற்று இனிதாக வாழ எனது அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மேலும் சில பதிவுகள்