பச்சை மொச்சைப்பிரட்டல்

தேதி: December 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
பூண்டு - 5
சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

மொச்சையை உப்பு போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து விடவும். தேங்காயுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு மொச்சை மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதித்து மசாலா வெந்தவுடன், அரைத்த தேங்காயை ஊற்றி கிளறி தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்