வெங்காய மசாலா

தேதி: December 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் -- 1/4 கிலோ
உருளைக்கிழங்கு -- 3 என்னம் (வேகவைத்து தோல் உரித்து பொடிதாக நறுக்கியது)
பட்டாணி -- 100 கிராம்(வேக வைத்தது)
தக்காளி -- 4 என்னம்
நல்லெண்ணைய் -- 50 கிராம்
சிவப்பு வத்தல் -- 6 என்னம்
சீரகம் -- 1 டேபிள் ஸ்பூன்
தனியா -- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -- 4 சிட்டிகை
தாளிக்க:
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்


 

பெரிய வெங்காயத்தை அரைக்கவும்.
தனியாக தனியா,வத்தல்,சீரகம் இவற்றை அரைக்கவும்.
தனியாக தக்காளியை அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த வெங்காயம்,தக்காளியை ஊற்றி வதக்கவும்.
3நிமிடத்திற்குப் பின் அரைத்த மசாலாவையும் சேர்த்து ஊற்றி வாசனை வரும் வரை வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பின் வேகவைத்த பட்டாணி,உருளைக் கிழங்கு சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
மேலே எண்ணெய் மிதந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
வெங்காய மசாலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா,
உங்கள் வெங்காய மசாலா நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.

god is my sheperd

நன்றி பெல்சியா ராஜன்..
இன்னும் நிறைய ரெஸிபியை ட்ரை பண்ணுங்க!!
பின்னூட்டம் அனுப்புங்க!!

Thanku fr this onion masala. its very tasty and also easy 2 do any time. thanku once again