தேதி: December 18, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
துவரம்பருப்பு - 100 கிராம்
வரமிளகாய் - 6
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கத்தரிக்காய் - 100 கிராம்
முருங்கைக்காய் - ஒன்று
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3
சின்னவெங்காயம் - 10
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
குக்கரில் துவரம் பருப்பை வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி பொடியாக நறுக்கிய காய்கறி, வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு போட்டு வேகவிடவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், மல்லி, கடலைப்பருப்பு, மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.
இதனை புளித்தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். காய்கள் நன்கு வெந்தவுடன் வேகவைத்த பருப்பை ஊற்றவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
Comments
சரஸ்வதி மேடம்
சரஸ்வதி மேடம்
இன்னைக்கு அரைத்துவிட்ட குழம்பு செய்தேன்.நல்லா இருந்தது மேடம். இன்னைக்கு வர மிளகாய் இல்ல, அதுக்கு பதிலா மிளகாய்த்தூளே போட்டுட்டேன்,மத்தபடி நீங்க சொல்லியிருக்க எல்லாமே போட்டேன். டேஸ்ட் வித்தியாசமா இருந்தது. நன்றி மேடம்.