முட்டை ஃப்ரைட் ரைஸ்

தேதி: December 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிரியாணி அரிசி - 2 ஆழாக்கு
முட்டை - 6
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 3
கேரட் - ஒன்று
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லிக்கட்டு - சிறிதளவு
நெய் (அ) எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியுடன் உப்பு சேர்த்து 4 கிளாஸ் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் 5 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்.
சாதம் உதிரியாக இருக்க ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வேக வைக்கலாம். எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் உள்ளவர்கள் அதில் வைத்தால் உதிரியாக இருக்கும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, முட்டைகளை உடைத்து ஊற்றி மிளகாய்பொடி, முட்டைக்கு தேவையான உப்பு போட்டு கிளறவும்.
மல்லித்தழையை கிள்ளி போட்டு இறக்கவும். கேரட்டை துருவி சேர்த்து, சாதத்தை கொட்டி கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வித்யாசமான ரெசிப்பி கேரட் சேர்த்து செய்தது, நன்றாக வ(இரு)ந்தது. நன்றி.

இப்படிக்கு
இந்திரா

indira

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த ப்ரைடு ரைஸ்ஸின் படம்

<img src="files/pictures/eggfried_rice.jpg" alt="picture" />

பிரைட்ரைஸ் சூப்பர்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் முட்டை பிரைட் ரைஸ் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"