உருளை பால் கூட்டு

தேதி: December 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறு உருளைக்கிழங்கு - கால் கிலோ
தேங்காய் - சின்ன மூடி
பச்சை மிளகாய் - 5
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேங்காயை துருவி பாலெடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து உரிக்கவும். கிழங்குடன் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கிழங்கில் கொட்டி தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்