பாராட்டுப் பத்திரம்

அறுசுவை உறுப்பினர்களை பற்றிய அவரவர்களின் கருத்துக்களை நாம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.....

ஜெயந்தி'கா
ஆயிட்டாங்க - மாமி
மாமாவுக்கு
அவங்கதான் -- சாமி

செல்விம்மா
இருக்காங்க இளமையா
அவங்க
போடுறாங்க
குறிப்பு எல்லாம் குளுமையா

மனோகரி மேடம் எழுதுராங்க
பயனுள்ள குறிப்பா..
அவங்க போட்டு இருக்க
லிப்ஸ்டிக் என்ன சிவப்பா??

ஜலீலா தர்றாங்க
குறிப்பா
அவங்க எழுதுவது
பொதுவா
சிரிப்பா...

ரூபி
போடுவது புது திரஃட்டு
பொதுவாக அவங்க
சமைப்பது ப்ரஃட்டு

ஹேமாவை
தான் காணலியே
அறுசுவை
போணிதான் ஆகலியே

அஸ்மா
தந்தாங்க அஸ்கா
அவங்க
செய்வாங்க நல்ல குஸ்கா

பாபு அண்ணா
குடுத்தாரு
கல்தா!!
நல்லா இருந்தா
சர்தான்!!!

ஹாய் சுபா,
ரொம்ப நல்ல எழுதி இருக்கிங்க. எனக்கு அவ்வளவா இங்க இருக்கவங்க பத்தி தெரியாது. அதனால என்னால எதுவும் எழுத முடியல :-( கூடிய சீக்கரம் நானும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதறேன்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

சுபா இந்த அளவுக்கு கவிதை எனக்கு வராது,ரொம்ப நல்ல இருக்கு என்ன உங்க கவிதை நயம்.
படித்து ரசிக்கமட்டும் தான் தெரியும்.எப்புடிப்பா இப்புடியேல்லாம் கல்க்குறீங்க...
ஜலீலா

Jaleelakamal

ஹாய் சுபா,
எப்படி இப்படியெல்லாம்? புது (!) கவித அருமை.
ஜெ மாமி கெளம்பிட்டாங்கம்மா கெளம்பிட்டாங்க. எதுக்கும் கொஞ்ச நாள் எஸ்கேப்பாயிடு, சொல்லிட்டேன். ஏன்னா பாட்டில் பிழையுள்ளது. சொற்குற்றமில்லை, பொருட்குற்றம் தானுள்ளது. சொல்லில் குற்றமிருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம், பொருளில் தான் குற்றமுள்ளது. யாரங்கே! இந்த தருமிக்கு (சுபா) கொடுக்க போகும் பொற்கிழியை நிறுத்தி வையுங்கள். பிறகு பார்க்கலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் சுபா! நலமா? என்னடா அது, கொஞ்ச நாளா சுபாவின் கானாவையே காணோமேன்னு பார்த்தேன். சூப்பர்! இப்படியே அடிக்கடி கொஞ்சம் எடுத்துவிடுங்க! :)

நீங்க குஸ்கான்னு சொன்னதும், உடனே என்னுடைய குறிப்பில் போய் தேடுகிறேன், கொடுத்தேனா என்று! உங்க வசனத்துல நானே குழம்பிட்டேன் சுபா :-) ஏன்னா உண்மையாவே குஸ்கா எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் செய்யும் குஸ்கா எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். (பெருமைக்கு இல்லை, நிஜமாத்தான்).தேங்காய் பால், மற்ற மற்ற எக்ஸ்ட்ரா அயிட்டங்கள் இல்லாமலே டேஸ்ட்டா வரும். ஆனா இன்னும் அதன் குறிப்புதான் கொடுக்கல. அதுவும் இப்போ உங்க கானாவை பார்த்த பிறகுதான் ஞாபகம் வருது. இதெப்படி இருக்கு? :-) அதுசரி, 'அஸ்கா'ன்னா என்ன சுபா?

அஸ்கா என்றால் சர்க்கரை என்று சொல்லுவார்கள்.
ஆனால் அது சென்னை பாஷையா என்று தெரியவில்லை...
தெரிந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்..
மனோகரி மேடம் வாருங்கள்...
ஆதரவு கரம் நீட்டுங்கள்..

ஜலீலா,
அது ja தான். உங்கள் பதில் என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.
மேலும் சிவப்புக்கீரை பற்றி கேட்டீர்கள் அதை பாருங்கள் உங்களுக்காக பல பதிவு...

சுபா பாடினா கானா
அத படிச்சா
சிரிப்பு வரும் தானா!

அஸ்கா என்று சர்க்கரையை சிதம்பரம் பகுதிகளில் சொல்வார்கள் என நினைக்கிறேன்

ஹாய் வின்னி,
கலக்குறீங்க..
ஒரு கானா போடலாம்னா திவாகர் எழுந்து விட்டான் இனி வேலை சரியாக இருக்கும்.
சரி இனி அடிக்கடி பேசுவோம்

என்னடா இது இந்த சுபா பொண்ணு கொஞ்ச நாலா கானா எதுவும் வுடாம கம்முனு கீதே என்னாச்சு இந்த பொண்ணுக்குன்னு ஃபீல் பண்ணிக்குனே மன்றத்துக்குள ரவுண்டு வந்தா.... ஆங் கண்டுக்கினேன்பா கானா .சுபா சூப்பரு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்