தேதி: December 23, 2007
பரிமாறும் அளவு: 8 person
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வேக வைத்து கொள்ளவும்:
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - மூன்று பல்( தட்டி கொள்ளவும்)
கறிவேப்பிலை - மூன்று மேசைக்கரண்டி ( இரண்டாக கிள்ளி வைக்கவும்)
தாளிப்பில் வதக்கி வேகவைக்க:
சாம்பார் வெங்காயம் - பத்து (அ) பெரிய வெங்காயம் எட்டாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி - இரண்டு (இரண்டையும் ஆறு ஆறு துண்டுகளாக நறுக்கவும்)
முருங்கைக்காய் - ஒன்று( இரண்டு அங்குலம் அளவு நறுக்கி கொள்ளவும்)
கேரட் - ஒன்று (வட்டமாக நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய கொட்ட பாக்கு அளவு(கரைத்து கொள்ளவும்)
வெல்லம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
நெய் - அரை தேக்கரண்டி
குக்கரில் பருப்பை களைந்து நெய்யில் வதக்கி சீரகம்,மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து கடுகு, சீரகம், பூண்டு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கி கொள்ளவும் (அ) பெரிய வெங்காயத்தை எட்டாக நறுக்கவும் ,தக்காளி, காய்கள்,பச்சை மிளகாய்,உப்பு, ஒரு சிறிய துண்டு முருங்கைக்காயை எடுத்து நீளவாக்கில் நான்காக நறுக்கி போடவும் அப்பதான் வாசனை கும்முன்னு இருக்கும்.
எல்லாவற்றையும் வதக்கி சாம்பார் பொடியையும் போட்டு, தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி சிம்மில் வேகவைக்கவும்.
காய் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மேலும் புளி வாசனை போகும் வரை கொதிக்க விட்டு மசித்து வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் வெல்லம், நெய், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
நம் தமிழ் நாட்டில் முக்கியமான குழம்பு வகைகளில் சாம்பாருக்கு தான் முதலிடம்
எப்போதும் உங்க சாம்பார் தான் செய்வீர்களா இதையும் செய்து பாருங்கள்.
Comments
Saambar
Inthe saambaarode enna item seithu saappitaal nandragha irukkum?
டியர் உமா(இறால் வறுவல், மட்டன் சுக்கா )
டியர் உமா
சாம்பாருக்கு என்னென்னவோ இருக்கு
காலை டிபன் என்றால் - பொஙகல்,உப்புமா,இட்லி,தோசை ,மைதா தோசை - அப்படியே நைட்டுக்கும் டிபனுக்கும்
மதியம் என்றால்
வெஜ் டேரியனாக இருந்தால் - சாம்பாருடன் பீட்ரூட் பொரியல்,மசால் வடை, கருனைகிழங்கு சிப்ஸ்,அப்பளம்,
இல்லை நான் வெஜ் என்றால் - மிளகு கறி (அ) பெப்பர் சிக்கன், சிக்கன் பிரை, மட்டன் சுக்கா பிரை ,மட்டன் கூட்டு, இறால் வறுவல், வெங்காய இறால்,மீன் பிறை,கட்லட் எந்த தொட்டுக்க்க வேன்டு மானாலும் செய்யலாம்,பிளெயின் சாத்த்துடன்.
நான் இப்படி தான் சாம்பார் வைப்பேன், சில சமையம் மற்றவர்களின் குறிப்பில் உள்ள சாம்பார் செய்து பார்ப்பேன், இது என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும். அல்லா காயும் கூட கொஞ்ச கொஞ்ச போடலாம்.
ஜலீலா
Jaleelakamal
ஜலீலாக்கா
ஜலீலாக்கா நாளைக்கி இத் செய்யனும் ...அல்லா காய்னா என்ன காய்?எனக்கு ஷேப் சொன்னா தான் புரியும் பே ர் புரியாது.
டைப்பிங் மிஸ்டேக்
டைப்பிங் மிஸ்டேக், சாரிப்பா
முன்காட்சி கிளிக் பண்ணால் என்னக்கு டைப் பண்ணது எல்லாம் போய்விடும்,
நான் எல்லாமே ஒரு குன்ஸ் ல தன் டைப் பன்ணுகிறேன்.
எல்லா காய் களும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து போடனும்.
வதக்கும் போது
ஜலீலா
Jaleelakamal
அக்கா
அக்கா சாம்பார் செய்து பார்த்தேன்...சூப்பெரா வந்தது ஆனா நெய் சேக்க மறந்துட்டேன் கடசீல தான் நியாபகம் வந்தது அதனால் கடசியில் 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கினேன்.
சாம்பார்
சாம்பார்
கடைசியில் நெய் விட்டால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும், முருங்கக்காயை ஒன்றுஎடுத்து நாலா நடுவில் கட் பண்ணி போட்டிங்களா அப்பதான் நல்ல இருக்கும்
ஜலீலா
Jaleelakamal
இல்ல
இல்ல ஜலீலாக்கா முருங்கை போடலை இவருக்கு பிடிக்காது..எனக்கு ரொம்ம்ப பிடிக்கும் போட்டுட்டு வெளியே எடுத்தாலும் கன்டுபுடிச்சுடுவார்..அந்த குச்சியை போட்டியான்னு கரெக்டா கேப்பார்...காய்களில் கும்பளங்காய்,வென்டக்காய் மட்டும் போட்டேன் அதையும் எடுத்துட்டேன் .ஆனா சூப்பெரா இருந்தது
கும்பளங்காய்
தளி வெண்டைகாய் என்றால் அதை வத்க்கி கடைசியி புளி ஊற்றுவதற்கு முன் போடனும்.
கும்பளங்காய் என்றால் என்னது
ஜலீலா
Jaleelakamal
சாரிக்கா
சாரிக்கா பூசனிக்காய் தான்...ஆமாம் வதக்கி தான் போட்டேன் என்னா முன் அனுபவம் வதக்காமல் போட்டு ஒருநாள் வழுவழுனு ஆச்சு..
சாம்பார்
ஜலீலா நேத்து எங்க வீட்டில உங்க சாம்பார்தாங்க. சூப்பரா இருந்துச்சுங்க. இனி அடிக்கடி இந்த சாம்பார் செய்வேனுங்க. ரொம்ப நன்றிங்க.
பூரி சாம்பார்
டியர் வினி, இதை கேட்க ரொம்ப சந்தோஷமாஇருகு,
இந்த சாம்பார் செய்து பார்த்ததற்கு நன்றி,
அடுத்த முறை செய்யும் போது நான்கு துண்டு பாவக்காயையும் சேர்த்து கொள்ளுங்கள்.
பாவக்காய்,காரம்,புளிப்பு,இனிப்பு சேர்ந்தால் கசப்பு தெரியாது
சரவனா பவாவில் ஆர்டர் செய்யும் போது சின்ன பையனுக்கு பூரி சாம்பார்,
அதை சாப்பிடும் போது திட்டி கொண்டே சாப்பிட்டான், இது என்ன் இது சாம்பாரா இது, இந்த பூரி என்ன் இழுக்கவே முடியல, நீங்க செய்வது தான் எனக்கு பிடிச்சிருக்கு என்பான்,
அவனுக்காவே, வாரத்தில் இரு முறை சாம்பார் ஆல் வெஜ் டேபுள்ஸ் போட்டு. அதில் பாவக்காயும் சேர்ப்பேன்.
ஜலீலா
Jaleelakamal
Nice sambar
Dear jaleela akka,
I tried your sambar and chicken-65 today.Both came out very well.Smell and taste of sambar is very nice.We both liked it very much.Thanks for the nice recipe.
Nirupama
சாம்பார்
அருமை தங்கை
நிருப்பமா சாம்பார் செய்து பார்த்து பின்னூட்டம் அனுபியதற்கு மிகவும் நன்றி.
ஜலீலா
Jaleelakamal
டியர் ஜலீலா
டியர் ஜலீலா தங்களின் சாம்பார் குறிப்பு மிகவும் சுவையாக இருந்தது, ரவை கிச்சடிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது நானும் சாம்பாரை பல முறைகளில் செய்வதுண்டு,அந்த வகையில் உங்க குறிப்பையும் செய்ய வாய்ப்பு கிடைத்தது நன்றி.
மனோகரி அக்கா ரொம்ப
மனோகரி அக்கா ரொம்ப நன்றி நீங்கள் ரவை கிச்சிடி க்கு சாம்பார் சூப்பராக இருந்த்தா?
யாரும் சமைக்கலாமில் காய்கறி சாம்பாரும் கொடுத்துள்ளேன்,
பதில் எல்லாவற்றிர்கும் பிறகு கொடுக்கிரேன்.
ஜலீலா
Jaleelakamal