பிரட் டோஸ்ட் வித் பெப்ப்ர் எஃக்

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை -- 2 என்னம்
பெரிய வெங்காயம் -- 2 என்னம் (மிகவும் பொடியாக நறுக்கியது)
பிரட் -- 8 என்னம்
வெண்ணைய் -- 8 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- 4 டீஸ்பூன்
சீரகப் பொடி -- 1/2 டீஸ்பூன்
மிளகுப் பொடி -- 1 1/2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஓரளவிற்கு ரோஸ் கலர் மாதிரி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு கிளறு கிளறி பின் சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு மீண்டும் நன்கு கிளறவும்.
வெங்காயம் எது, முட்டை எது என தெரியாமல் பொடிப்பொடியாக ஆகி விடவேண்டும். அது தான் ருசி.
இந்த வேலை நடக்கும் போதே ஃப்ரட்டில் வெண்ணையை இரு பக்கமும் தடவி தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
ஒரு ஃப்ரட்டில் இந்த முட்டை கலவையை வைத்து இன்னொரு ஃப்ரட்டை மேல வைத்து க்ராஸாக வெட்டி பறிமாறலாம்.
அல்லது ஒரு ஃப்ரட்டின் நடுவில் முட்டை கலவையை வைத்து உருட்டி ரோல் செய்தும் கொடுக்கலாம்.
ருசியான காரமான பிரட் டோஸ்ட் வித் பெப்ப்ர் எஃக் ரெடி.


மேலும் சில குறிப்புகள்