இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

அனைத்து வளங்களுடனும் நல்ல உடல் நலத்துடனும் பொங்கும் மகிழ்வுடனும் புதிய ஆண்டான 2008 பிறக்க, அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

திருமதி. அஸ்மா, திருமதி.ஜலீலா, திருமதி.கதீஜா, திருமதி.தளிகா மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதரிகட்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!!

திருமதி செந்தமிழ்செல்வி, திருமதி.ரோஸ்மேரி மற்றும் அனைத்து கிறிஸ்துவ சகோதரியர்க்கு என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!

கடந்த பல நாட்களாக அறுசுவையே சரியாகக் கிடைக்காமலும் கிடைத்தாலும் எந்த பதிவையும் போடமுடியாமலும் இருந்ததால் சகோதரிகளுக்கு தாமதமாகத்தான் வாழ்த்துக்களைக் கொடுக்கிறோமே என்ற வருத்தம் இருந்தாலும் இந்த பதிவையாவது இப்போது போட முடிந்ததே என்ற சிறு திருப்தி ஏற்படுகிறது!!

அன்பு சகோதரி மனோ,
தங்களின் அன்பான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி மனோ மேடம் :-)

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Happy New Year...

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷ் எங்க வேலை கெடச்சுருச்சா?

மனோ அவங்க எங்க போய்ட்டாங்கன்னு யோசிச்சேன் தா வந்தாச்சு..வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி:-)..அதிரசம் சூப்பெரா வந்தது..ஈத் ஹாலிடேஸ்கு என்ன செஞ்சீங்க

அன்புள்ள தாளிகா!

உங்கள் பதில் பார்த்ததும் உடனேயே பதில் எழுத விரும்பியும் வழக்கம்போல தகராறு அறுசுவையில் நுழைவதற்கு!! நான் இங்கு வந்து 20 நாட்கள் ஆகிறது! அதிரசம் நன்றாக வந்தது அறிய மகிழ்வாக இருந்தது. பாதி மாவை சும்மாவாகவே சாப்பிட்டதாக எழுதியிருந்ததைப் படித்தேன்! ஈத் விடுமுறை நாட்களில்தான் எங்கள் உணவகத்தில் கூட்டம் அதிகம். என் கணவர் வெளியே வருவதெல்லாம் நடக்காது. அதனால் என் மகனுடன் மட்டும் ஒரு நாள் துபாய் சென்று வந்தேன். அடுத்த நாட்கள் உறவினர் வந்ததால் விருந்து,உபசரிப்பு என்று போய் விட்டன.

மனோ மேடம் சுகமா ஷார்ஜாவில் எங்கு ஹோட்டல் வைத்திருக்கிரிகள்.
ஜலீலா

Jaleelakamal

ஆன் வந்துட்டேன்...குழந்தைகள் சின்னதா இருக்கும்போதும் பிறகு கல்யானம் பன்னினதும் தான் பெற்றோர்கள் பிசியாவங்கல்ல....ஆமா ஜலீலாக்க நானும் அவங்கள்ட கேக்கனும்னு நெனச்சேன் எங்க ரெஸ்டாரன்ட்னு தெரிஞ்சா போலாமேன்னு தான்.
உங்க அதிரசத்தை போலவே ஒரு முறை எங்கம்மா செஞ்சிருக்காங்க ஆனா அப்ப எப்படின்னெல்லாம் கேக்கல..உண்மையில் அது பச்சையாஅக சாப்பிட தான் இன்னும் டேஸ்ட் என்ன வயிறு வலி வந்துரும்.:-)

உங்களின் பெருநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தாமதமானாலும் வாழ்த்துக்கூற மறக்கவில்லையே அதுவே சந்தோஷம்.உங்களுக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கள் வாழ்த்துக்கள்.எப்படி பொங்களுக்கு இந்தியா வருவீர்களா இல்லை அங்கேயேதான் கொண்டாடுவீர்களா.

அன்புடன் கதீஜா.

புதுமண தம்பதிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அண்ணன் பாபு மற்றும் அண்ணி பாப்பி அவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கள் நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு இது தலை பொங்கள் ஆச்சே அதனால அண்ணியுடன் உங்கள் பொங்களை சந்தோஷமாக கொண்டாடுங்கள். பிறக்கும் புது வருடத்தில் இருந்து எல்லா மனமகிழ்ச்சியும் பெற்று நீங்கள் இருவரும் குறையாத அன்புடன் பாசமாகவும் நேசமாகவும் வாழ இந்த தங்கையுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

அறுசுவையின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புது வருடம் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக ஆரம்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்