மாலட்டு

தேதி: December 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டுக்கடலை - அரை கப்
சர்க்கரை - கால் கப்
உருக்கிய நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி


 

மேற்கண்ட எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு பொடித்து தேவையெனில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து லட்டுகளாக பிடித்து பரிமாறவும். பிறகு குழந்தைகள் தினம் தினம் இதை கேட்பார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா எனக்கு இந்த மாலாடு ரொம்ப பிடிக்கும்.ஆனா நாங்க பொட்டு கடலை,சர்க்கரை,ஏலக்காயை பொடிச்சுட்டு கொஞ்ச கொஞ்சமா உருக்கின நெய் விட்டு உருண்டைகளாக பிடிப்போம்.ஆனால் அதிகம் நெய் தேவைப்படும்.இனிமே இப்படி ட்ரை பன்ரேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படியா கவி..எங்க வீட்டில் சின்னதிலிருந்தே நானே தனியா செஞ்சு சாப்பிடும் ஒரே பொருள் இதான்..அப்பல்லாம் நெய் சேக்காம பால் சேத்து செய்வேன் ஒரு நாள் என் பக்கத்து வீட்டு பையன் நெய் சேத்து செஞ்சா இன்னும் சுவையா இருக்கும்னான் அப்பலிருந்து இப்படி தான்.

தளிகா, இந்த லட்டு மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருந்தது. 5 நிமிடத்தில் செய்து அதைவிட குறைந்த நேரத்தில் சாப்பிட்டாச்சு. :)
-நர்மதா :)

திருமதி. நர்மதா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தான் செய்த மாலட்டுவின் படத்தினை அனுப்பியுள்ளார். அதனை இங்கே கொடுத்துள்ளேன்.

<img src="files/pictures/maladdu.jpg" alt="maladdu" />

ஹை சந்தோஷமா இருக்கு நர்மதா.செய்து பின்னூட்டம் கொடுக்கும்பொழுது படம் எடுத்தால் அது கண்டிப்பா சந்தோஷமா இருக்கு.
நர்மதா சின்னதில் என் பாட்டி தான் எல்லா பேரப்பிள்ளைகளையும் கவனிப்பாங்க..அம்மாமார்கள் வேலை செய்வாங்க..அப்ப பட்டி எங்களை சமாளிக்க ஒரு சப்பத்தி பலகையில் பொட்டுகடலையும் சர்க்கரையும் வச்சு தருவாங்க நாங்க பொடி பொடியோன்னு 1 மணிஏரத்துக்கு பொடிச்சு கடைசியில் பால் விட்டு சாப்பிடுவோம்..அதன் சுவையே தனி..எனக்கே ஆசை வந்துவிட்டது உங்க ப்டத்தை பார்த்து

ஹாய் தளிகா,
என் சின்ன வயது நியாபகங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்... நானும் இப்படிதான், பொட்டுகடலை+ சர்க்கரை சேர்த்து பொடி பண்ணி சாப்பிடுவேன். இதே மாதிரி, வேர்கடலையிலும் செய்து சாப்பிட்டதுண்டு!. இதுல தம்பி தங்கையெல்லாம் கூட கூட்டு! ம்ம்ம்ம்.....ம் , அது எல்லாம் ஒரு காலம்!
அந்த பழைய நாள் நினைவுகளுடனே, உங்க மாலட்டு செய்து சுவைத்துமாயிற்று. : ) நன்றி தளிகா!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ