நூறு சமையல் குறிப்புகளை தந்த சகோதரி முத்துலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நூறு குறிப்புகளை தந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் இதுபோல பல நூறு குறிப்புகளை தரும்படி வாழ்த்துகிறேன்.

எப்படா பாக்கி ரெண்டு குறிப்பைக் கொடுத்து சதமென ரொம்பவே எதிர்பார்க்க வைத்து, சதமடித்த முத்துலட்சுமிக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு வெற்றிகள் காண வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நூறு குறிப்புகள் கொடுத்த முத்துலஷ்மி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

மாலினி

அன்புள்ள சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். முதலில் எனக்கு அறுசுவையில் வாய்ப்பு கொடுத்த அட்மின் அண்ணாவுக்கு நன்றி, நன்றி.......... என்னை வாழ்த்திய அனைத்து சகோதிரிகளுக்கும் பல நன்றிகள்.

உங்களுடன் எனது சமையல் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள விருப்பப்படுகிறேன். திருமணத்திற்கு முன் சமையலில் அதிக ஆர்வம் உண்டு. புதுசு புதுசாக ஏதாவது செய்து பார்ப்பேன். அதில் ப்ளஸும் இருக்கும் மைனஸும் இருக்கும். சமையல் ஆரம்பிக்கும் போது எனக்கு நிறைய தவறுகள் வரும். பழக பழக தான் நல்ல வரும்.
நான் கல்லூரியில் UG 2nd year படிக்கும் போது Aug 2003ல்ல திருச்சியில் inter-college சமையல் போட்டி நடந்தது. கிட்டத்தட்ட 13 கல்லூரிகளுக்கு மேல் பங்குபெற்றன. அதில் 4 பிரிவுகளாக பிரித்து இருந்தன. நான் கோதுமை என்ற பிரிவில் கலந்து கொண்டேன். அங்கு பார்த்தால் எல்லா மாணவிகளுகம் வித விதமாக கேள்வியே படாத உணவு வகைகளை சமைத்து கொண்டு வந்தார்கள். நானோ சாதாரண தேங்காய் பரோட்டாவும், பட்டாணி மசாலாவும் செய்தேன். எல்லோரும் தங்கள் படைப்புகளை வித விதமான வண்ண வண்ண பாத்திரங்கள், காய்கறிகள் கொண்டு அலங்கரித்து இருந்தார்கள். நானோ சிறிதளவு வெங்காயமும், கேரட்டும் வைத்து இரண்டு சிறிய தட்டுகளில் அலங்கரித்து இருந்தேன்.இப்படியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை பரிசு கிடைக்கும் என்று. மொத்தம் 5 நடுவர்கள் வந்திருத்தனர். எங்க கல்லூரியில் இருந்து யாருமே வரவில்லை. நான் மட்டும் தனியாக ரிசல்ட் சொல்லும் வரை உட்கார்த்து இருந்தேன். காலை 10 மணிக்கு போட்டி ஆரம்பித்தது. ரிசல்ட் சொல்லும் போது மணி 3 இருக்கும். எனது பிரிவில் எனக்கு 2 வது பரிசு கிடைத்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். பங்கு பெற்றவர்களில் பாதி பேர் நியுட்டிரிஷன் படிக்கும் மாணவிகள். அவர்கள் தான் அதிக பரிசுகளை வாங்கினார்கள். பின் திருச்சியில் இருக்கும் local கேபிள் சானலில் எனது recipeயை போட்டோ எடுத்தார்கள். அந்த சமையல் போட்டி நிகழ்ச்சி என்னால் மறக்கவே முடியாது. அதற்கு பின்பு சமையலில் அதிக ஆர்வம் வந்தது.

அறுசுவையில் சென்சுரி அடிங்க என்று முதலில் ஊக்குவித்த ஹர்ஷினி மேடத்துக்கும், ஜானகி அக்காவுக்கும் நன்றி.சமையல் அனுபவங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கு ஒரு தனி திரட் போடலாம். எல்லா சகோதரிகளும் பகிர்ந்து கொள்வோம். உங்கள் எல்லோருக்கும் இந்த topic ரொம்ப bore அடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் சந்திப்போம். அறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
முத்துலெஷ்மி

anbudanஹாய் முத்துலக்ஷ்மி,

என்னப்பா போர்னு சொல்லிட்ட.உன் அனுபவம் கேட்க நன்றாக இருந்தது.உன் சமயல் அனுபவத்தை எல்லாம் எடுத்து விடுப்பா.கண்டிப்பாக கேட்ப்போம்.

அருசுவை அட்மின், அருசுவை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

முத்துலக்ஷ்மி, இன்னொரு முறை போர்ன்னு சொன்னா அடிதான் விழும்:-) உங்க சமையல் அனுபவங்கள் எல்லாத்தையும் சொல்லுங்க. கேக்க ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கு.

எப்படி இருக்கீங்க !முதலில் பிடியுங்கள் எனது மனமுவந்த வாழ்த்துக்களை!அப்புறம் லேட்டா வாழ்த்துவதர்க்கு காரணம் அதிகமாக அருசுவைக்கு வர நேரமில்லை!இன்று தான் எல்லா பக்கங்கலையும் படித்து பதிவு போடுகிறேன்!உங்கள் சமயல் அனுபவம் படிக்கவும் சுவையாக இருந்தது மேலும் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

மேலும் சில பதிவுகள்