பக்கோடாக்குழம்பு

தேதி: December 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பக்கோடா தயாரிக்க:
துவரம்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
சோம்பு (அ) சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லிதழை - தேவையான அளவு
எண்ணெய் - 150 மி.லி
குழம்பிற்கு தேவையானவை:
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

துவரம்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டியில் வடித்துவிட்டு சோம்பு, உப்பு போட்டு அரைக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பிசையவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிசறியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு முக்கால் பதம் வரை வேகவைத்து எடுக்கவும்.
எல்லாம் வறுத்த பிறகு எண்ணெய் குழம்பிற்கு தேவையானதாக இருந்தால் அதிலே குழம்பு தாளிக்கலாம்.
அதிகமாக இருந்தால் சிறிது எடுத்துவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்து குழம்பு சற்று வற்றியவுடன் கீழே இறக்கி வைத்து பொரித்த பக்கோடாக்களை போட்டு மூடி வைக்கவும்.


பக்கோடாக்குழம்பு சாதம், இட்லி, தோசை எல்லாவற்றிற்கும் மிகவும் நல்ல காம்பினேஷன். சோம்பு வாசனை பிடிக்காதவர்கள் சீரகம் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் பக்கோடாக் குழம்பு மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"