பீர்கங்காய் தோல் துவையல் (தேங்காய் சேர்த்தது)

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பீர்கங்காய் தோல் - 1 கிண்ணம்
உ.பருப்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - காரம் தேவைகேற்ப
பூண்டு - 2 பல்
தேங்காய் - 1/4 கிண்ணம்
புளி - சிறிதளவு
உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப


 

பீர்கங்காய் தோல் எடுத்து நன்றாக சுத்தம் செய்து, வாணலியில் எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.
அதனுடன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு வறுக்கவும்.
அதனுடம் உப்பு,புளி சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியிலே அதிக தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
துவையல் தயார்.


சூடான சாதத்துடன் துவயலை நெய்/நல்லெண்ணை விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்