தேதி: December 28, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தனியா - 3 டேபிள் ஸ்பூன்
து.பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
க.பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு-1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் -1 டீ ஸ்பூன்
மேலே சொன்ன பொருள்களை தனி தனியாக எண்ணெய் விடாமல் வறுத்து நொறு நொறுவென்று நன்கு காய்ந்த (dry) மிக்ஸியிலே அரைத்து கொள்ளவும்.
ரசம் பொடி நெறைய அரைத்து வைத்து கொள்ளலாம்.(அந்த ratio உபயோகிக்கவும்) நீண்ட நாள் பொடி கெடாமல்/வண்டு வராமல் இருக்க சிறுது உப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து ரச பொடியும் கலக்கவும்.