தக்காளி ரசம்

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தக்காளி பெரியது - 3
து.பருப்பு - 1 கை பிடி
புளி - பெரிய நெல்லி அளவு
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கரிவேர்பில்லை - சிறிது
கொத்தமல்லி கொத்து- சிறிது
கடுகு,உ.பருப்பு - தாளிக்க
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு ஏற்ப
ரசபொடி-1 டேபிள் ஸ்பூன்


 

து.பருப்பு,தக்காளி இரண்டையும் நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள்,1 ஸ்பூன் நல்லெண்ணெய், சிறுது தண்ணீர் விட்டு 4 விசில் வரை வேக விடவும்.
ஆவி அடங்கியதும் அதை ஆற விட்டு - கைகளாலோ/மிக்சியிலோ அரைத்து வைக்கவும்.
இதில் கரிவேர்பிலை,கொத்தமல்லி நசுக்கி இரண்டையும் போட்டு - கைகளால் நன்றாக கலக்கவும்.
பூண்டை நன்றாக தட்டி போடவும்.
இதில் புளி தண்ணீர் விடவும்.
பிறகு இதில் உப்பு போட்டு தண்ணீர் விட்டு - மிகவும் புளிப்பாக இல்லாதவாறு தண்ணீர் விட்டு கலக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து மீதி எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு போடவும்.
கடுகு,உ.பருப்பு வெடித்தவுடன், காய்ந்த மிளகாய் போட்டு கலக்கி வைத்த கலவையை ஊற்றி நுரையாக பொங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் ரசபொடி(என் குறிப்பில் இருக்கிறது) போட்டு அதில் கொதித்த கலவையை ஊற்றவும்.


தக்காளியின் புளிப்பு சுவைக்கு ஏற்ப புளியின் அளவை மாற்றி கொள்ளவும்.தக்காளி ரசம் சாதத்துடன் உருளை சிப்ஸ் சரியான காம்பினேசன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி சரஸ்வதி அவர்களுக்கு, உங்களுடைய தக்காளி ரசம் செய்தேன். சூப்பராக இருந்தது. ரசப்பொடி அரைத்து வைத்துக்கொண்டால் இதை மிகவும் எளிதாக செய்துவிடலாம். நன்றி உங்களுக்கு.

ஹலோ வின்னி,
என்னபா என்னோட தக்காளி ரசம் செய்தீர்களா இல்லை சரஸ்வதி அவர்கலோடதா ....குழப்பம்...

அன்புள்ள RSMV, நான் 100% உங்களுடைய தக்காளி ரசம்தான் செய்தேன். எந்த ஞாபகத்தில் பெயர் மாற்றம் செய்துவிட்டேன் என்று தெரியவில்லயே. சாரிம்மா. அந்த ரசம் சூப்பராக இருந்தது. இனி அடிக்கடி செய்வேன். அப்போது நிச்சயம் உங்களை மறக்கமாட்டேன்.

வின்னி உங்கள் commentsகு மிகவும் நன்றி.

ஹலொ RSMV,

நான் உங்களுடைய தக்காளி ரசம் 2 முரை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என் கணவருக்கு ரசம் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு சாப்பிடவும் பிடிக்காது, செய்யவும் தெரியது. திருமணமாகி இந்த 6 மாததில் தமிழ் வருட பிறப்பென்று முதல் முறை செய்தென். நிறைய பாரட்டுகளை பெட்றென்.

Thank u so much for a wonerful recipe.. it was really easy to prepare and tast was awesome.

Thanks.
Bindubalaji
USA