மாங்காய் ஊறுகாய்

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

மாங்காய் (தோல் உரித்து துண்டுகளாக நறுக்கியது) - 6
உப்பு - அரை கப்
கடுகு - கால் கப்
வெந்தயம் - கால் கப்
பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 15 இலை
நல்லெண்ணெய் - அரை கப்
வினிகர் - கால் கப் அல்லது இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்க்கலாம்.


 

மாங்காய் துண்டுகளில் அரை கப் உப்பு சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஒரு நாள் வைக்கவும். நன்கு உப்பில் ஊறியிருக்கும்.
கடுகையும், வெந்தயத்தையும் தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்து கடைசியில் மிளகாய் தூள், பெருங்காயத் தூளையும் ஒரு நிமிடம் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து பின் ஊறவைத்த மாங்காயை போட்டு கிளறி 5 நிமிடம் வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றி விடும்.
பின் தீயை அணைத்து விட்டு அதில் மேலே பொடி செய்து வைத்துள்ள கடுகு, வெந்தயம், மிளகாய் தூள், பெருங்காயத்தூளை கொட்டி கிளறி விட்டு ஆறவிடவும்.
ஆறியதும் வினிகர் சேர்த்து ஒரு சுத்தமாக தண்ணீர் இல்லாத ட்ரையான பாட்டிலில் போட்டு மேலே சிறிது நல்லெண்ணெய் மிதக்குமாறு அமர்த்தி வைக்கவும்.
இது 2 நாளிலேயே உப்பு பிடித்து ருசியாகி விடும். ருசித்து விட்டு உப்பு குறைவென்றால் இன்னும் சேர்த்து கிளறவும். சுவையான மாங்காய் உறுகாய் ரெடி.


தயிர் சாதம் - மாங்காய் ஊறுகாய், பருப்பு - மாங்காய் ஊறுகாய், மோர் குழம்பு - மாங்காய் ஊறுகாய் இன்னும் எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். இது என் பாட்டி செய்யும் ஊறுகாய் . ஆனால் குறிப்பில் கடுகு, வெந்தயம் அளவை கொஞ்சம் குறைத்துக் கொடுத்திருக்கிறேன். வறுத்து பொடித்து எடுத்து வைத்துக் கொண்டால் அடிக்கடி செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா நான் இந்த ஊறுகாய் செய்தேன்... ஆனால் கசப்பு அதிகமாக இருக்கிறது... என்ன செய்வது என்று தெரியவில்லை... சொல்லுங்களேன்.... Please....

வித்யா பிரவீன்குமார்... :)

Ingredients இதே அளவு தான் போட்டேன்.... செய்தவுடன் ருசி பார்த்த போது கசப்பு அதிகமாக தெரிகிறது..... Help please.....

வித்யா பிரவீன்குமார்... :)