தேதி: December 28, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மஷ்ரூம் - கால் கிலோ
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 4
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி -10
கசகசா - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
ஒரு வெங்காயம், ஒரு தக்காளியை அரைக்கவும். முந்திரியையும், கசகசாவையும் அரைக்கவும். கீரையை பொடியாக நறுக்கவும். மஷ்ரூமை நான்காக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயும், வெண்ணெயும் விட்டு சோம்பு, சீரகம், பட்டை, கிரம்பு, தட்டிய ஏலக்காய் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் அரைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கி வெந்தயக்கீரை போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு போட்டு கிளறி மஷ்ரூமை சேர்த்து வதக்கவும்.
அரைத்த முந்திரி விழுதை சேர்த்து மஷ்ரூம் வேகும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு வெந்தவுடன் இறக்கவும்.
Comments
சரஸ்வதி மேடம் மஷ்ரூம்
சரஸ்வதி மேடம் மஷ்ரூம் எப்ப்டி பார்த்து வாங்கனும், என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் மஷ்ரூம் பிரை, ஹோட்டல் டேஸ்டில் வேண்டும், சரவனாவாவில் ஒரு செட் வங்கி கொடுத்தேன் மற்ற அயிட்டம் எல்லாம் விலை கம்மி அது மட்டும் எட்டு திர்ஹம் அது கரைக்டாக தெரிந்தால் நானே வங்கி செய்து கொடுப்பேன்.வாழ்த்தியதற்கு நன்றி
ஜலீலா
Jaleelakamal
பட்டன் மஷ்ரும்
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
பட்டன் மஷ்ரும் என்று கேட்க வேண்டும். பேக்டு மஷ்ரும்தான் இங்கு கிடைக்கும். பேக்கிங் தேதி நாளானதாக இருக்காமல் பிரஷாக இருக்க வேண்டும். வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு குளிர்ச்சியான கிளைமேட்
என்றால் பிரச்சனை இல்லை. வாங்கலாம். ரெசிப்பி கொடுத்துள்ளேன் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் கொடுக்கிறேன்.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை