சைனீச் சிக்கன் ப்ரைய்

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி -- 2 கிலோ
அஜினோமோட்டோ -- 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் -- 1 கப்
வினிகர் -- 1/2 கப்
நல்லெண்ணைய் -- 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -- 2 என்னம்
மிளகுத்தூள் -- 2 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் -- 3 டேபிள் ஸ்பூன்
மைதா -- 2 டேபிள்ஸ்பூன்
டால்டா -- பொரிக்க தேவையான அளவு


 

வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி தண்ணீரில்லாமல் அரைக்கவும்.
கோழியை எலும்புடன் இருக்கும் துண்டுகளாகப் பார்த்து எடுத்து வைக்கவும்.
பின் அதனுடன் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ,உப்பு, மஞ்சள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் 1/2 வேக்காடு வேகவைத்து எடுக்கவும்.
கார்ன் ப்ளார், மைதாவை சேர்த்து சலித்து அதை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் டால்டாவை போட்டு உருகி காய்ந்தபின், அரை வேக்காடு வெந்த துண்டுகளை மாவில் நனைத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய சைனீஸ் சிக்கன் ப்ரைய் ரெடி.


மேலும் சில குறிப்புகள்