ஈசி மைதா வடை

தேதி: January 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 கப்
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5 ( காரம் தேவைக்கேற்ப)
கரிவேர்பில்லை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறுது
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


 

பெரிய வெங்காயம்,கரிவேர்பில்லை,கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி மேலே கூறிய எல்லா பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து உளுந்த வடை மாவு பதத்திற்கு பிசையவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாக பொரித்து எடுக்கவும்.


சிறு குழந்தைக்கு கொடுக்கும் பொழுது பச்சை மிளகாயை தவிர்க்கவும்.
Green Chilli சாஸ் அல்லது Tomato சாஸ் இதற்கு பொருத்தம்.
திடீர் விருந்தினர் வருகைக்கு இந்த வடை செய்து கேசரியுடன் பரிமாறலாம்.வடை பொரித்து முடிப்பதற்குள் கேசரி கிளறி விடலாம்.

மேலும் சில குறிப்புகள்