சர்க்கரை பொங்கல்

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 ஆழாக்கு (400 கிராம்)
பச்சை பருப்பு - 1/2 ஆழாக்கு (100 கிராம்)
முந்திரி - 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம் (உலர்ந்த திராட்சை)
ஏலக்காய் - 6
பச்சை கற்பூரம் - மிளகு அளவு
ஜாதிக்காய் - பாதி மிளகு அளவு
வெல்லம் - 750 கிராம்
பால் - 100 கிராம்
நெய் - 100 கிராம்


 

அரிசியையும், பருப்பையும் 10 நிமிடம் ஊறவைக்கவும். பச்சை கற்பூரத்தையும், ஜாதிக்காயையும் 50 கிராம் பாலில் ஊறவைக்கவும். வெல்லத்தை பொடியாக தட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சையும் வறுத்து கொள்ளவும். குக்கரில் அரிசியையும், பருப்பையும் கழுவி பாலுடன் 8 கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெல்லத்தில் 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்தவுடன் குக்கரில் உள்ள பொங்கலில் கொட்டி கிளறவும்.
வறுத்த முந்திரி, திராட்சை போட்டு பச்சைக்கற்பூரம் கலந்த பாலையும் ஊற்றி நெய்யை சேர்த்து கிளறி ஏலக்காயை தூளாக்கி போட்டு கிளறி இறக்கவும்.
பொங்கல் பானையில் வைப்பதானால் பாலை உற்றி பானையின் விளிம்பளவு அரிசி, பருப்பு கழுவிய தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
பொங்கி வரும்போது கையளவு அரிசியை 3 முறை போட்டு விட்டு கொதிக்கும் தண்ணீரை கரண்டியால் எடுத்து விட்டு பின் அரிசி முழுவதையும் போட்டு வேகவிடவும்.
வேகும் அளவிற்கு தண்ணீர் தேவையானால் எடுத்த தண்ணீரை சேர்த்து கொள்ளலாம்.
நன்கு வெந்தபிறகு தட்டிய வெல்லத்தை போட்டு கரைந்தவுடன் நெய், தட்டிய ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை, பாலில் ஊறிய பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்