கறி சுரைக்காய் சால்னா

தேதி: January 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி - அரை கிலோ
சுரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - நான்கு
தக்காளி - ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து தேக்கரன்டி
பச்சை மிளகாய் - மூன்று
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் - எட்டு பத்தை
எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
பட்டை - இரண்டு அங்குல துண்டு
ஏலம் - ஒன்று
லவங்கம் - ஒன்று
புதினா - எட்டு இதழ்
கொத்தமல்லி - கால் கட்டு


 

குக்கரில் எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், லவங்கம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்கவும்.
நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தீயை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் விடவும். கலர் மாறியதும் கறி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி பாதியை அரைத்து ஊற்றவும் பாதியை நறுக்கி போடவும்.
நல்ல கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று அல்லது நான்கு விசில் விட்டு இறக்கி சுரைக்காய், தேங்காய் அரைத்தோ (அ ) தேங்காய் பால் எடுத்தோ ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு இறக்கவும்.


இஸ்லாமிய இல்லங்களில் கறியில் சுரைக்காய் சேர்த்து நோன்பு 27 ல் செய்வார்கள். நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் இந்த காய் சாப்பிட்டார்கள் என்று சொல்வார்கள். சொர்க்கத்து காய் இது, சொர்கத்து கனி பேரீட்சை பழம்.

மேலும் சில குறிப்புகள்