அருசுவை சகோதரிகளே,

அருசுவை சகோதரிகளே,

பரங்கிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வது என கூறுங்களேன்.

என்றும் அன்புடன்
வித்யாவாசுதேவன்.

வித்யா
புளி கூட்டு நிறைய விதத்தில் செய்யலாம். சேனை புளி கூட்டு கொடுத்துள்ளேன். இது சிம்பில் முறை விரதம் டைமில் வெங்காயம் ,பூண்டு சேர்க்கமாட்டார்கள் அவர்களுக்கு இது உதவும்.
இந்த முறையில் செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

வித்யா சேப்பங்கிழங்கு புளி குழம்பும் கொடுத்துள்ளேன் செய்து இந்த இரண்டு முறையில் நீங்கள் கேட்பது எதுவோ அந்த மாதிரி பறங்கிக்காயை செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் வித்யா,
என்னுடைய குறிப்பில பரங்கிக்காய் புளிக்கூட்டுன்னு இருக்கு. அதில தயிர் மட்டும் கலக்காம செய்து பார். நீ அதைத்தான் கேட்கிறேன்னு நினைக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பரங்கிக்காய் புளிக்குழம்பு செய்முறை நான் முன்பே கொடுத்துள்ளேன் பாருங்கள் வித்யா. ரொம்ப நன்றாக இருக்கும். செய்துவிட்டு சொல்லுங்கள்.

anbudanசகோதரிகள் செல்வி, ஜலீலா, மாலதி,

மிக நன்றி, இந்த ஞாயிறு செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக பின்னூட்டம் அனுப்புகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

நான் ஆரஞ்சுத்தோல் புளிக்குழம்பு எப்படி செய்வது என்று கேட்டிருந்தேன். யாருமே சொல்லவில்லை. ஜெயந்தி மேடம் கூட சொல்லமாட்டேன்கிறாங்க. ப்ளீஸ்ப்பா ..... ரொம்ப நல்லா இருக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன். யாராவது சொல்லிக்கொடுத்தால் நன்றி.....நன்றி..

சாரி மாலதி,
நான் நீங்க கேட்டிருந்ததை பார்க்கவே இல்லை. இப்ப கொடுத்திடறேன், கொஞ்ச நேரத்தில. என்னோட ஃபிரண்டு வைப்பாங்க. ரொம்ப நல்லாயிருக்கும். அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துகிட்டேன். அதனால, அந்த ரெசிபி அவங்களுக்கு சமர்ப்பணம். இப்ப அவங்களை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன், உடலாலே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..
என் மகன் ஒரு வயதாகிறது .. சளி அடிக்கடி பிடிக்கிறது .
எதாவது குறிப்புகள் கொடுங்களேன் ...
மேலும் இந்த இன்ஜி பூண்டு விழுது செய்து பிரிட்ஜ் ல எத்தனை நாள் வைக்கலாம் என்று சொல்லுங்களேன் ..
நான் treadmill 20 mins செய்த பிறகு நன்றாக வியர்த்து அதுவும் அடங்கி விடுகிறது .
அதன் பின் எனக்கு புதுனற்சியாக உள்ளது ..நான் சொர்வதில்லை ..ஆனால் மேற்கொண்டு செய்வது வீண் என்று தோன்றுகிறது ..
வெறும் 20mins செய்வதால் கொழுப்பு கரயுமா?? மேற்கொண்டு செய்வது பலன் தருமா .. வயிறு சதை குறைய வழி சொல்லுங்களேன் ..

மேலும் சில பதிவுகள்