வெண் பொங்கல்

தேதி: January 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பச்சரிசி -- 1 கப்
பாசி பருப்பு -- 1/2 கப்
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
நெய் -- 3 ஸ்பூன்
முந்திரி -- 10 என்னம்
சிவப்பு மிளகாய் -- 3 என்னம்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப


 

பச்சரிசி, பாசிபருப்பை கழுவி ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் நெய் ஊற்றி 15 நிமிடம் குக்கரில் ஸ்டீம் வந்தபின் வெயிட் போட்டு வைக்கவும்.
நன்றாக குழைந்தால் பொங்கல் நன்றாக இருக்கும். 15 நிமிடம் கழித்து அடுப்பை நிறித்தி ஸ்டீம் போனதும் குக்கரை திறக்கவும்.
பின் தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி முந்திரியை தாளித்து பொங்கலில் கொட்டவும்.
அதே கரண்டியில் நெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டவுடன் சீரகத்தூள்,மிளகுத்தூள் தாளித்து நன்றாக பொங்கலில் படும் அளவு நன்கு கிளறி விடவும்.
மீதியுள்ள நெய்யை ஊற்றி விடவும்.
வெண்பொங்கல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

செய்து பார்த்தோம். அருமையாக இருந்தது.
இதில் இரண்டு பொருட்களை மறந்து விட்டேன் (மஞ்சள் தூள், பெருங்காயம்). இருந்த போதும் நன்றாகவே இருந்தது.