தேதி: January 7, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
அப்பளம் - 8 (வறுத்தது)
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி (தாளிக்க)
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்ப்பொடி போட்டு வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டி அப்பளங்களை நொறுக்கி போட்டு இறக்கி மூடவும்.