ஆப்பம்

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (10 votes)

 

ஊற வைக்க:
பச்ச அரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் கப்
சேர்த்து அரைக்க:
சாதம் - ஒரு கை பிடி
தேங்காய் துருவல் - கால் மூடி


 

ஊற வைக்கவேண்டியவைகளை இரவு ஊற போட்டு காலையில் அரைக்கவும், அல்லது காலையில் ஊற போட்டு மாலையில் அரைக்கவும்.
ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக நறுக்கி சுற்றி முழுவதும் தடவவும்.
அப்பதான் ஒட்டாமல் வரும்.
ஊற்றும் போது தீயை அதிகமாக வைக்க வேண்டும். கையில் பிடித்து சுழற்றி தீயை குறைத்து வைத்து ஐந்து நிமிடத்திற்குள் வெந்துவிடும்
சுழற்றி விட்டு இட்லி சட்டி மூடி போட்டு (அ) குப்பி மூடி போட்டு மூட வேண்டும்.
இரண்டு கை பிடியிலும் தனித்தனியான சின்ன துணியாக பிடித்து கொள்ளவும். பெரிய துணி என்றால் கேஸ் அடுப்பில் மாட்டி தீ பிடிக்கும் அபாயம் இருக்கு.
எண்ணெய் இல்லாத உணவு இது


வெந்தயம் சேர்ப்பது மொறுகலாக சிவக்க, ஜவ்வரிசி, சாதம் சேர்ப்பது பஞ்சு போல் வருவதற்கு. எல்லா வகையான குருமாக்களுக்கும் இது பொருந்தும். முட்டை வட்டலாப்பம் ரொம்ப நன்றாக இருக்கும். தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவலை சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆப்பம் அரைக்கும் போது சாதம் சேர்த்து அரைக்க வேண்டுமா?
சாதத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் சேர்க்கலாமா?

உங்க ஆப்பம் செய்தேன் நன்றாக வந்தது. ஜெயந்தி சொன்னது போல் அவனை சூடு படுத்திவிட்டு மாவை உள்ளே வைத்தேன். அப்படியும் சிறிது தான் புளித்தது. அதற்கே 1 நாள் ஆகிவிட்டது. ஆனாலும் ஆப்பம் சூப்பராக வந்தது. ஓரம் க்ரிஸ்பியாக நடுவில் மிருதுவாக நன்றாக வந்தது, ரொம்ப தாங்ஸ்!!

கலா சூப்பர் ஆப்பமா, நானும் போன வாரம் அரைத்த ஆப்ப மாவில், தேங்காய் சேர்த்து அரைத்ததால் இரண்டு முறை ஆப்பம்,ஒரு முறை பராசப்பமும் செய்தேன்,
ஜலீலா

Jaleelakamal

மாவு புளிக்க ஊரவைக்கும் அரிசியை ஊரவைக்கும் முன்பு அரிசியை நன்கு கலுவியபின்பு நல்ல நீர் ஊற்றி ஊரவைக்கவும்.அறைக்கும் போது ஊரவைத்த தண்ணிரை ஊற்றி அறைக்கவும்.அறைத்த பின்பு நன்கு கையால் மாவை கலக்கி வைக்கனும்.இன்று காலையில் ஒரு பதினொரு மனிக்கு ஆட்டி வைத்தால் அவனில் வைத்த பின்பு மறுநாள் காலையில் எடுத்தால் புளித்திருக்கும்.நான் இப்படித்தான் செய்கிறேன்.இட்லி தோசைக்கு முயர்ச்சித்து பாருங்கள் KT.

கலா
பர்வீன் சொலவது சரி
நனும் மறந்து போய்விட்டேன், அரைத்ததும் கையால் நல்ல கலந்து வைத்தாலே புளித்து விடும், புளித்த மோரும் ஊற்றலாம், யாரோ அருசுவை தோழி சொல்லிய்ரிந்தாங கார் டிக்கியில் வைக்கனும் என்று செய்த்து பாருங்கள்.
இந்த டென்ஷனே தேவையில்லை என்றௌ தேவையோ அதற்கு இரண்டு நால் முன் அரைத்து கைஅயால் நல்ல கலக்கி வெளியிலேயே வையுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலா உங்க ஆப்பம் நேற்று செய்தேன்.நன்றாக வந்தது.எனக்கு இதற்கு முன்பு ஆப்பம் செய்யவே தெரியாது என்னிடம் ஆப்பசட்டியும் இல்லை.ஆனால் செய்யனும் என்று முடிவு பண்ணிய பிறகு எப்படியாவது செய்தேஆகவேண்டும் என்று என்னிடம் இருந்த வடசட்டியிலேயே டிரை பண்ணினேன் நன்றாக வந்தது.
அன்புடன் தீபா

ப்ரதிபாலா வடை சட்டி இரும்பு சட்டியில் தான் செய்யனும் அப்பதான் சூப்பரா வரும்,
ஆப்பசட்டி வடை சட்டி இல்லாதவைகல், நான் ச்டிக் பேனில் அப்ப்டியே ஊற்றி, இட்லி சட்டி கொப்பி மூடி போட்டு மூடி விட்டு வந்ததும் திருப்பகூடாது, அப்படியே எடுத்து விடனும் ,சுட்டு வைக்கும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டும் அப்போ இடயில் சின்ன சின்ன பீயில் பேப்பர் வைத்து அடுக்கா சுடனும், நல்ல வரும்,
குழந்தை களுக்கு முட்டை ஆப்பம் செய்து கொடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா எங்க வீட்ல நானும் அவரும் தானே அதனால் எப்பொழுதும் ஊற்றும் பொழுதே அவர் சாப்பிடுவார்.அவர் சாப்பிட்ட பிறகு சில சமையம் எனக்கு ஊற்றி கொடுப்பார் இல்லை என்றால் நானே ஊற்றி கொள்வேன்.ஒரு பக்கம் மட்டும் தான் வேகவைத்தேன் முட்டை ஆப்பம் இன்று டிரை பன்றேன்.என்னை தீபானே கூப்பிடுங்க
அன்புடன் தீபா

அன்பு ஜலீலா நான் எப்பொழ்தும் மாவு திரித்து கப்பி கஞ்சி காய்ச்சித்தான் ஆப்பம் செய்வேன்.உங்கள் செய்முறை சுலபமாக தெரிகிரது.நாளை அரைக்கிரேன்.சாதம் போட்டு அரைத்தால் இரண்டு மூன்ட்ரு நாட்கள் வைக்கலாமா

Today is a new day.

அன்புள்ள சோலை

ஆப்பம் மாவு நான் நான் ஒரு வாரம் வரைகூட வைத்து சுடுகிறேன், ஆனால் உப்பு போட்டு கலக்க கூடாது அப்ப அப்ப கலக்கிக்கொள்ளனும்.
தேங்காய் சேர்த்தும் அரைகலாம், இல்லை மாவு கலக்கும் போது அரைத்தும் ஊற்றலாம்.
ஜலீலா

Jaleelakamal

டியர் அதிரா
ஆப்பம் இங்கு இருக்கு
பார்த்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஆப்பதுக்கு அரைத்த மாவில் 1 ஸ்பூன் எடுத்து நன்கு நீர் விட்டு கரைத்து கன்ஞி காய்ச்சி மாவில் சேர்த்து ஆப்பம் செய்தால் ஸாப்டாக வரும்

exact-டா நீங்க சொன்ன மாதிரியே ஆப்பம் செய்தேன். நல்ல வந்தது. ஆப்பம், செய்யும் டெக்னிக் சொல்லி தந்ததிற்கு நன்றி!!

டியர் வித்யா ஆப்பம் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா உங்கள் குறிப்பின்படி இந்த ஆப்பம் செய்தேன். சாஃப்டாக மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். உங்களுக்கு என் நன்றிகள்.

வினி ஆப்பம் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
கே.டி கலா நல்ல இருக்காங்களா இந்த ஆப்பத்துக்கு தான் நாங்க நிறைய பழைய பதிவில் நகை சுவையா பேசி இருக்கோம்.
கலாவை விசாரித்ததாக சொல்லவும்.
அப்படியே இதையும் சொல்லுங்கள்.//ஏ கலா கலா லக்க்ஷ் ரூபா கொடுக்கலாம்.

ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா சீக்கரம் இங்கே வந்து பதில் தரவும்.நான் ஆப்பத்துக்கு ஊறவைத்து விட்டேன்..இதில் ஒரு சின்ன பிரச்சனை தேங்காய் இல்லை(இது சின்ன பிரச்சனையா என்று திட்டுவது காதில் விழுகிறது)இப்ப நான் என்ன செய்ய நாளை இரவுக்கு(செவ்வாய் இரவு) நான் இதை செய்ய வேண்டும் விளக்கம் பிளீஸ்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆகா ரேணுகா சாரி பா நெட் பிராப்ளம் நான் டூ இன் ஒன் மாவு அரைக்கும் போது தேங்காய் போடாமலே நல்ல வரும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா இந்த ஆப்பத்துக்கு பின்னூட்டம் கொடுக்கவே மறந்துட்டேன்...ரெம்ப சூப்பர்.நேற்று என்னவர் கூட சொன்னார் போன வாரம் சுட்ட ஆப்பம் சூப்பர் என்று(அவர் சொன்னதால் தான் பின்னூட்டம் கொடுக்க வில்லை என்ற ஞாபகமே வந்தது)
உங்கள் பதில் அன்று வர லேட்டாஆயிடுச்சா...அதுக்கு முன்னா நான் கல்லைல் உளுந்தை போடுட்டேன்.காய் கடை நம்பரை தேடி தேங்கா சொன்னா துருவல் இல்லை முழுசுதான் இருக்கு என்றான் சரி பரவாயில்லை.தா என்று வாங்கிட்டேன்.அதை உடைக்க இடம் கிடைக்கவில்லை...ஒருவழியா கண்டுபிடித்து உடைத்தால் தேங்கா தன்னி வீடே கொட்டிடுச்சு...அப்பறம் தேங்காவை துண்டு போட்டு போட்டால் மசியவே இல்லை...மாவுக்குல் தேங்காயை தேடி எடுத்து மிக்சியில் அடித்து சேர்த்தேன்...நான் ஆப்பம்மே செய்தது இல்லை.2 முறை செய்து சரியில்லை...உங்கள் அருளால் அதும் வற்றி கிடைத்துவிட்டது,,,,நன்றிக்கா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா ஆப்பம் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
தேங்காய் ரொம்ப பாடு படுத்தி விட்டதா ..

தேங்காய் துண்டு போட்டு அப்படியே போட கூடாது. மிக்ஸியில் துருவியது போல் செய்து பிறகுசேர்த்து அரைக்கனும்.
எங்க மாமியார் அரைக்கும் போது சேர்த்து அரைக்க மாட்டார்கள்.
தேங்காய் தொட்டுக்கொள்ள பாலெடுக்கும் போது பாலெடுகாமல் நல்ல கொஞ்சம் தண்ணீர் மாதிரி அரைத்ஹ்டு சேர்த்து மாவை கலக்குவார்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஆப்பம் மாவில் கால்spoon சர்கரை ச்சேர்து செய்து பாருஙகல். மிகனன்ட்ராய் இருக்கும்

விஜயா
நன் எப்போதும் ஆப்பம்,தோசைக்கு நல்லெண்ணை -ஒரு தேக்கரண்டியும்,சர்க்கரை ஒரு தேக்கரண்டியும் சேர்த்து ,உப்பு சோடா போட்டு கலக்குவேன்.
ரொம்ப நல்ல வரும்
மொருகலா, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று நம்க்கே தெரியாது
ஜலிலா

Jaleelakamal

anbe sivam
mrs.ஜலீலா...
நான் உங்கள் முறையில் ஆப்பம் செய்தேன். பஞ்சு போல மிருதுவாக வந்தது. நான் எனது முறையில் செய்யும்போது இவ்வளவு சாஃப்டாக வந்ததில்லை.
l.k.g. படிக்கும் என் மகள் "அம்மா சூப்பரா இருக்கு அம்மா,வெரி டேஸ்டி" என்று சொல்லி நன்றாக சாப்பிட்டாள்.
உங்கள் குறிப்புக்கு நன்றி.
ஒரு சந்தேகம்..ஆறி விட்டால் மிருதுத்தன்மை கொஞ்சம் குறைந்து விடுமா? சூட்டோடு சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்குமா?
நன்றிகளுடன்
கவிதாசிவக்குமார்

anbe sivam

கவிதா சிவகுமார்.

ஆப்பம் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் பொண்ணு விரும்பி சாப்பிட்டால் என்றீர்கள் ரொம்ப சந்தோஷம்.

சுட்டதும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இடையே இடையே ஒரு சிறிய துண்டு பாயில் பேப்பர் வையுங்கள்.

ஆறி விட்டா எப்படி இருக்கும் என்று தெரியல,ஏன்னா நாங்க சுட சுட உடனே சாப்பிட்டு விடுவோம். ஆனால் குருமா (அ) தேங்காய் பால் ஊற்றி சாப்பிடு பாருங்கள்.

Jaleelakamal

anbe sivam
கணவருக்கும் , மகளுக்கும் சூடாக ஊற்றிக் கொடுத்தேன். நான் சாப்பிடத்தான் கொஞ்சம் லேட் ஆனது. ஹாட் கேஸில் போட்டு வைத்திருந்தது அடுப்பில் இருந்து எடுக்கும் போது இருந்ததை விட கொஞ்சம் சாஃப்ட்னெஸ் குறைந்து இருந்தது. அதுதான் கேட்டென். உடனடியாக வந்து பதில் தந்ததற்கு நன்றிகள் பல...
கவிதாசிவகுமார்.

anbe sivam