தோசை

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ஊற வைத்து அறைக்க:
பச்சரிசி - இரண்டு கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - அரை தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அரைத்து புளிக்க வைத்து சுடவும்.
இதில் பஞ்சு தோசையும் சுடலாம், மொறு மொறு தோசையும் சுடலாம்


இதற்கு சட்னி, சாம்பார், குருமா, குழம்பு, வெங்காய இறால் எல்லாம் பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா அது என்ன அரை - கால் தேக்கரன்டி.??

தளிக்கா இப்ப பாருங்க
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா, மொறு மொறு தோசை எப்படி சுடுவதென்று சொல்லுங்கள். செய்துவிட்டு சொல்லுகிறேன். நான் போனமாதம் இரு தடவை தோசை சுட்டு, வெறுத்துப்போய் இனிமேல் அம்மா இங்கு வந்தால்தான் தோசை செய்து சாப்பிடுவது என்ற முடிவுடன் இருக்கும்போது உங்கள் குறிப்பு படிக்கிறேன். மீண்டும் தோசை ஆசை வந்துவிட்டது. சொல்லுங்கள் please.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா மொறு மொறு தோசை

நேற்று நீங்க தோசைதான் மொறு மொறுன்னு பேப்பர் ரோஸ்ட் மாதிரி, தொட்டுக்க உள்ந்து வெங்கயா துவையல்,பொட்டு கடலை துவையல்.
சுப்பர்
சுடும் போது யராவது போட்டோ எடுத்தால் யாரும் சமைக்கலாமில் போடலாமே என்று.நினத்து கொன்டே சுட்டேன்.

தோசை சுடும் போது கவனிக வேண்டியது.
அடுப்பில் தவ்வாவை போட்டதும் லேசா சூடுவரும் போது தீய குறைத்து வைத்து அரை வெங்காயத்தை வட்ட வடிவமாக கட் செய்து ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு தவ்வவை இடது ஒரு கையால் நல்ல பிடித்து கொன்டு மறு கையால் அழுந்த தேய்கனும்.
பிற்கு சுர்ர்ன்னு நடுவில் ஒரு குழி கரண்டி அள்ளி ஊற்றி வட்ட வடிவமாகா அப்படியே சுழறனும் பத்து தடவை போட்டு அழுத்த கூடாது.
பிற்கு நல்லெண்ணை (அ) சாதா எண்ணை அதில் ஒரு தேகரண்டி நெய் ஊற்றியே கலந்து வத்து கொள்ளுங்கள்.
எண்ணை தெளித்தா மாதிரி ஒவ்வொரு ஓட்டையிலும் விடனும் அப்படியே இரண்டு நிமிடம் மொறுகியதும் திருப்பி போடாமல் இரண்டாக மடித்து எடுத்து விட வேண்டியது.
என்ன அதிரா புரிந்ததா விளக்கம்?

ஜலீலா

Jaleelakamal

1கப் என்றால் எவ்வளவு கிராம் /சுன்டு

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நன்றி,
இந்த முறை வென்றுவிடுவேன். தோசையா நானா ஒரு கை பார்ப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்