அவசர மாங்காய் ஊறுகாய்

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கிளி மூக்கு மாங்காய் - இரண்டு (மீடியமாக நறுக்கி கொள்ளவும்)
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி (அ) வறுத்து பொடித்தது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு தூள் - அரை தேக்கரண்டி
வெல்லம் - ஒரு துண்டு


 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய மாங்காயை கொட்டி கிளறவும்.
அதனுடன் உப்பு, மிளகாய்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் வதக்கி இறக்கி விடவும். வேக விட கூடாது


இது அவசர மாங்காய் ஊறுகாய், கர்ப்பிணி பெண்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். ஜலிலா'ஸ் ஸ்பெஷல் ஊறுகாயும்.
சில புளிப்பு மாங்காய் கூட இப்படி செய்யலாம், ஆனால் கொஞ்சம் வெல்லம் அதிகமாக சேர்த்து கொள்ளவும். இந்த ஊறுகாய் செய்தால் அன்றே காலி ஆகிவிடும்.

மேலும் சில குறிப்புகள்