தேதி: January 10, 2008
பரிமாறும் அளவு: ஒரு நபருக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
முட்டை - ஒன்று
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பட்டரும் எண்ணெயும் சேர்ந்த கலவை - இரண்டு தேக்கரண்டி
நூடுல்ஸை நொறுக்கி இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து இரண்டு நிமிடத்தில் இறக்கி வடிக்கட்டி குளிர்ந்த தண்ணீரில் அலசி கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசறி வைக்கவும். அப்போது தான் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
பட்டர், எண்ணெயை காயவைத்து வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் முட்டையை நன்கு அடித்து வதக்கவும். நூடுல்ஸை போட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.