கறி குழம்பு( ஈசி முறை)

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு: 8 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறியில் ஊற வைக்க:
மட்டன் எலும்புடன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி
பெரிய தக்காளி - மூன்று
பெரிய வெங்காயம் - இரண்டு
தயிர் - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டரை தேக்கரண்டி
தனியாத் தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
தாளிக்க:
எண்ணெய் - ஐந்து தேக்கராண்டி
டால்டா - அரை தேக்கரண்டி
பட்டை - ஒரு அங்குலம் மூன்று
ஏலம் - இரண்டு
கிராம்பு - நான்கு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு (இரண்டாக ஒடித்து போடவும்.)
கொத்தமல்லி தழை - கால் கட்டு
புதினா - கால் கட்டு
எலுமிச்சை - ஒன்று
தேங்காய் - ஐந்து பத்தை (அ) கெட்டி பால் ஒரு டம்ளர்


 

முதலில் மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
முதலில் ஒரு சட்டியில் தக்காளியை போட்டு நல்ல பிசையனும், பிறகு மட்டன், வெங்காயம், தயிர் போட்டு பிசையவும்.
பிறகு மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி தழை, புதினா போட்டு, உருளையை மண்ணில்லாமல் கழுவி நறுக்கி போட்டு எல்லாவற்றையும் நல்ல கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தாளிக்க வேண்டியவைகளை பெரிய குக்கரில் தாளித்து ஊற வைத்ததை போட்டு நல்ல ஐந்து நிமிடம் கிளறி, ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பிறகு குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து மூடி போட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
கடைசியில் தேங்காய் பால் ஊற்றி, சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான ஈசியான கறி குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா வந்தது.. ரெண்டு பேரும் நல்லா ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டோம்.. சப்பாத்திக்கு சாதத்துக்கும் நல்லா இருந்தது.. எப்படியாவது ரத்த சோகை போக வைக்கனும்.. ரொம்ப நன்றி ஜலீலா அக்கா... படங்கள் அட்மினுக்கு அனுப்பி இருக்கேன்..

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தங்க கட்டி இலா, என்னபார்கிறீர்கள், ஒரு இடத்தில் என்னை சர்க்கரை கட்டி என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் உடனே பதில் போட்டேன் ஆனால் வந்து சேரல அப்ப அருசுவை பிராப்லத்தால் அதான் இப்ப சொல்றேன்//

இலா ஈசி கறி குழம்பு செய்து பார்த்தாச்சா?
நல்ல வந்தததா? பின்னூட்டத்துக்கு நன்றி.
அருசுவையில் உள்ள எல்லா சமையலும் கரெக்டா செய்து பார்த்து உடனே பின்னூட்டம் கொடுத்துவிடுவீர்கள் அது எனக்கு ரொம்பபிடித்திருக்கு

Jaleelakamal

திருமதி. இலா அவர்கள் இந்த செய்முறையின்படி தயாரித்த கறிக்குழம்பின் படம்
<br /><br />
<img src="files/pictures/mutton_gravy.jpg" alt="Mutton kulambu" />

டியர் இலா ஈசி கறி குழம்பு படம் சூப்பரா வந்துள்ளது.

செய்து பார்த்து போட்டோவும் அனுப்பி உள்ளீர்கள் மிக்க நன்றி.

ரொம்ப சந்தோஷம்.
ஜலீலா

Jaleelakamal

நல்லா சாப்பிட்டா .. அப்புறம் நன்றி சொல்ல வேண்டியது தான் பாக்கி!!!

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சலாம் ஜலிலா மேடம், இன்று என் வீட்டில் நெய் சோறு'கு ஈசி கறி குழம்பு செய்தேன். சூப்பர் டேஸ்ட். நல்லா ருசியாக இருந்தது. ருசித்து சாபிட்டொம். என் ஹஸ்பன்ட் ரொம்ப பாராட்டினார்.தேங்க்ஸ்.
******நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.*******
அன்புடன் பஜீலா.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பஜிலா ஈசி கறி குழம்பு பின்னூட்டட்துக்கு நன்றி.
நெய் சோறுக்கு சூப்பரா இருக்குமே.சுவையாக செய்து கணவரிடம் பாரட்டையும் பெற்றிருக்கிறீகல். சந்தோஷம்.
ஜலீலா

Jaleelakamal