எடை குறைய

அன்பு சகோதிரிகளுக்கு

நான் gym membership card வாங்கிவிட்டென். என் கணவர் வர இரவு 7.45 ஆகி விடும். 8 மணிக்கு ஏரொபிக்ஸ் அதற்க்கு முன் வெருட் ஏதெனும் பயிற்சி செய்துவிட்டுதான் இது செய்யனுமா? After my c-section எனக்கு எடை கூடிவிட்டது. நான் வேரு என்னென்ன பயிற்சிகள் செய்யலாம். என் வயிறு இன்னும் குறயவில்லை.சகோதரிகலின் பதிலுக்காக காத்துக்கொன்டிருக்கிரெ. i have 1 yr child

பாலம்மு இடுப்பு சதை குறைய சூடா வெண்னீர் அருந்தி கொண்டே இருங்கள்.
நடை பயிற்சி தான் முதல்.
அதோடு டயட்டும்.
இல்லை ஸ்கிப்பிங்க் பன்னுங்க
ஜலீலா

Jaleelakamal

பாலம்மு அதுவும் இல்லாமல்,எது செய்தாலும் தொடர்ந்து செய்யனும்.
இல்லை என்றால் புஸுன்னு ஊறி விடுவீர்கள்.
ஆகையால் எந்த உடற் பயிற்சி ஆனாலும் தொடர்ந்து செய்யனும்.

ஜலீலா

Jaleelakamal

அதிரா நீங்க பேசிக்கொண்டிருக்குமிடத்தில் நுழைய முடியல யார் பாலம்மு வா அதிராவா, இதுக்கு மேல் பேச முடியலயே முடிந்த வரை பதில் போடுகிறேன் எரர் வந்தால் விட்டி விடுகிறேன்
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா சொல்வதுபோல் நடைப் பயிற்சிதான் சிறந்தது. treadmillல் தினமும் ஒரு மணித்தியாலம் நடக்கப் பாருங்கள். ஓட வேண்டாம். முடிந்தவரை விரைவாக கைகளை வீசி நடவுங்கள். அவரவர் உயரத்திற்கு தக்கபடிதான் வேகத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அரை மணித்தியாலம் போதாது நாளடைவில் நேரத்தைக் கூட்டி ஒரு மணித்தியாலம் செய்யப் பாருங்கள்.
ஒரு மணித்தியாலமா என ஏங்கவேண்டாம். நானும் அப்படித்தான் ஏங்கினேன், என் கணவர் சொன்னார்,treadmill ல் ஏறும்போது நினையுங்கள் இன்று 20 நிமிடம்தான் செய்யப் போகிறேன் என்று, 20 நிமிடம் வந்தபின் நினையுங்கள் இன்னும் 5 நிமிடம் செய்யலாமே என்று இப்படியே 30 நிமிடம் தாண்டிவிட்டால் அடுத்த 30 நிமிடம் சுலபமாகப் பறந்துவிடும்.
அதை விட வயிற்றிற்கு கைகளிற்கு என சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். நடப்பதற்கு முன்னரும் பின்னரும் காலை stretch பண்ணவேண்டும்.
வாரம் ஒருநாள் ஓய்வெடுங்கள். ஒரு கிழமையில் நிறை பார்க்கத் தொடங்க வேண்டாம். ஆரம்பத்தில் தசைகள் இறுகுவதால் நிறை கூடித்தான் பின் குறையத் தொடங்கும். உடற்பயிற்சியின்போது உடலில் தேவையற்ற உப்புகள் கொழுப்புகள் கரையத் தொடங்குவதால் அதனை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தசை நோ ஏற்படலாம் அதனால் பறவாயில்லை. ஆனால் ஏதாவது அதிகம் நோ தொன்றின் சில நாள் ஓய்வெடுத்து மீண்டும் தொடருங்கள். இன்னும் ஏதாவது என் மண்டையில் தட்டினால் அப்பப்ப விளாசுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எந்த எண்ணையில் பொரித்த அயிட்டம் சாப்பிட்டாலும்,வெண்ணீர் குடிக்கனும் ,பிரியானி சாப்பிடால் கூட அப்பதான் கொழுப்பு சேராது, சிலருக்கு சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கும் வெண்ணீர் அருந்துங்கள்.
எப்பா போதும் பா கொஞ்ச்ச்ம் பேசுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது சர்வரை சரி பன்னால் தான் ஒழுங்க பேச முடியும்.
ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

அதிரா மற்றும் ஜலீலா அக்காஸ் ..
உங்களுடைய பதிலுக்கு நன்றி /.. ஜலீலா நீங்கள் கூரயுள்ளது சரி.. வெந்நீர் குடிக்க பழகுகிறேன்.. ஓட்ஸ் உம் தான்

அதிரா நீங்கள் கூறி இருபது போல் செய்ய முயற்சிக்கிறேன் ..

நீங்கள் ஸ்பீட் லிமிட் சொல்லுங்களேன் .. ஆனால் பலர் treadmill .. ல ஓட தானே செய்கிறார்கள் .. அங்கு சைக்கிள் , ரன்னேர் , உண்டு .. ஆனால் நான் அதை தொட்ட தில்லை ..
treadmill மட்டும் போதுமா வயிறு குறைய??? உங்களை எப்படி அழைக்க ??

பாலம்மு என்னை எப்படி வேண்டுமென்றாலும் அழையுங்கள். எப்படி அழைக்கிறீர்கள் என்பது எனக்கு முக்கியமில்லை, என்னையும் அழைக்கிறீர்களே அதுதான் முக்கியம். இங்கு 2 வயது குழந்தை கூட பெயர் சொல்லித்தானே அழைக்கிறது.
treadmill ல் ஓடலாம், எப்ப தெரியுமோ? முதலில் நடந்து உங்கள் உடம்பைப் பழக்கிக் கொள்ளுங்கள் அதாவது fit ஆகி விட்டால் பின் ஓடலாம். தமிழில் ஒரு பழமொழி இருக்கிறதே"அதிவேகம் சடுதிமரணம்" என்று. அதாவது ஆரம்பமே வேகமாக இருந்தால் விரைவில் இடுப்புவலி கால்வலி ஏற்பட்டு பின் உடற்பயிசி செய்வதே முடியாத ஒன்றாகிவிடும். அதனால் மெதுவாக தொடங்குங்கள் ஒரு வருடம் தொடர்ந்து செய்யுங்கள் முடிந்தால் பின் ஓடலாம்.

வேகம் பற்றிக் கேட்டீர்கள். இங்கு uk ல் mile/h ல் தான் கார்,மெசின் எல்லாம் இயங்குகிறது. நான் கவனித்தேன் கனடா,அமெரிக்காவில் km/h ல்தான் எல்லாம் உள்ளது. உங்கள் மெசினைக் கவனியுங்கள்.

எனது உயரம் 5 அடி 4 அங்குலம். நான் 3m/h ல்தான் நடக்கிறேன். 5 அடிக்கு குறைவெனில் அதைவிட வேகத்தைக் குறையுங்கள். அப்போ தான் இடுப்பு வலி வேறு வலிகள் வராமல் தடுக்கலாம். நீண்டநாள் செய்யலாம். உங்களால் விரைவாக நடக்க கூடிய வேகத்தை பிடித்து தொடர்ந்து அப்படியே செய்யுங்கள். (1mile= 1.6 kilometres).
எங்களுக்கு ஒரு மும்பை நண்பி(doctor) இருக்கிறார். அவ மிகவும் அழகு. மெலிந்த உடல்தான். அவருக்கு பயம் இங்கு தான் மொத்தமாகி விடுவேனோ என்று. அதனால் gym ல் புதிதாக இணைந்தார். treadmillல் ஏறினாராம் நடக்கத் தொடங்கினாராம். பக்கத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தனராம் அவர்களைப் பார்க்க தனக்கு வெட்கமாக இருந்ததாம் தான் மட்டும் நடக்கிறேனே என்று. உடனே வேகத்தைக் கூட்டி ஓடினாராம். அவ்வளவுதான் தெரியுமாம். அப்படியே மெசினால் வழுக்கி முன்னால் விழுந்து மயங்கி விட்டாராம். பின் வெட்கத்தில் அங்கு போவதில்லை என்றார்.

(உறுப்பினர் பகுதியில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதைப் போட்டால் நல்லது. எங்கேயோ படித்தேன் us ல் இருப்பதாக).
எங்கள் வீட்டில்தான் treadmill உள்ளது. சைக்கிளும் இருந்தது அதை ஒருவரும் தொடுவதில்லை .இடம்பிடிக்கிறதே என்று நண்பருக்கு கொடுத்தோம். என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் நடைப்பயிற்சி போதுமானதாக இருக்கிறது.
நீங்கள் முடிந்தால் gym ல் இருக்கும் எனக்கு பெயர் தெரியவில்லை. கால்களை நீட்டியபடி இருந்து கைகளால் பெல்ட்டை வயிறுவரை இழுத்து பின் விடுவது. அது நல்லதென்கிறார்கள்.முடிந்தால் கொஞ்சனேரம் செய்யுங்கள்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

HI jaleela,

I asked this question many times but no one answered me.i want to put weight. u know after my c-section delivery(2 yrs back)also i didnt put weight.The chart showed in the arusuvai shows me im underweight. so plez give me some FAT ideas to put weight.

thanks
jayanthivinay

எல்லோரும் வெய்ட்டை எப்ப்டி குறைப்பது , அப்ப்டியே குறைந்தாலும், கொஞ்ச நாளில் ஏறி விடுகிறது.

டியர் ஜெயந்தி

1. அடித்து குடிக்கனும்.
எப்ப்டி என்றால்
பால் நல்ல கொதிததும் ஒரு முட்டையை நல்ல அடித்து அந்த பாலை ஊற்றுங்கள்.
பிற்கு நெய் ரெடியா சின்ன் தூக்கு டிபனில் வைத்து கொள்ளனும் அப்படியே லேசா கேஸ் அடுப்பில் காண்பித்து உருக்கனும் ரொம்ப இல்லை லேசா கைபியை பிடித்து கொண்டு காண்பிக்கனும் உடனே அதிலிருந்து ஒரு தேக்கரண்டி நெய், இரண்டு மேசை கரண்டி தேன் முட்டை + பாலில் ஊற்றி நல்ல கலக்கி குடிங்க, எப்பன்னா காலையில் எழுந்ததும்.
daily 40 days
ஜலீலா

Jaleelakamal

டியர் ஜெயந்தி

2. மட்டன் வைத்து நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள.

3. டிரையான அயிட்டம் சாப்பிடவேண்டாம்.

4.முன்று வேளையும் நல்ல சாப்பிடுங்கள் சாப்பிட்டு விட்டு நல்ல துங்குங்கோ.

நான் முதல் சொன்ன முட்டை பாலை தொடர்ந்து சாப்பிட்டாலே வெயிட் போடும்.

இந்த முட்டை வைத்தியம் என் பாட்டி உடையது.

மட்டன் சூப் செய்து சாப்பிடுங்கள்.

5. னைட் பகல் இரு வேளையும் சாதம் சாப்பிடுங்கள்.
என்னப்பா இது வெயிட் போட நல்ல வெட்டுங்க,

6.இரண்டு மணிக்கொரு முறை எதாச்சம் கொரிங்க.

அப்பரம் பிந்து கோஷ் மாதிரி ஆகி விட்டு கொறைக்கனும் என்றீர்கள் அது யாராலும் முடியது.

ஒகே ஜெயந்தி
7. பொடிதத உடைத்த கடலையில் நெய் வாழைப்பழம்,மிளகு தூள் கலந்து சாப்பிடுங்கள்.

//ஒகே ஜெயந்தி வர்டா, அப்படி போடு போடு இந்த டிப்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா//.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்