ராஜ்மா மசாலா - முறை 1

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராஜ்மா -- ஒரு கப்
பட்டை -- ஒரு அங்குலம் அளவு
கிராம்பு -- 2 என்னம்
வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சிவப்பு மிளகாய் பொடி -- 1ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- தாளிக்க


 

முதலில் ராஜ்மாவை இரவே ஊறவைக்கவேண்டும்.
பின் குக்கரில் 10 நிமிடம் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும்.
பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சிவப்பு மிளகாய் பொடி சேர்த்து வதக்கி உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த ராஜ்மாவை போடவும்.
நன்கு 15 நிமிடம் கிளறி வேகவைக்கவும்.
அப்பொழுதுதான் மசாலாவுடன் சேர்ந்து ராஜ்மா சுவையுடன் இருக்கும்.
சுவையான சத்தான ராஜ்மா மசாலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்