சுண்டல் மசாலா

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொண்டைக்கடலை - 200 கிராம்
வரமிளகாய் - 10
மல்லி - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மிளகாய், மல்லி, பெருங்காயம், வெந்தயம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து அரைக்கவும்.
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடித்து விட்டு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சுண்டலை போட்டு அரைத்தவற்றில் தேவையானதை போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

en ammaa ippadithaan seyvaargaL. ippOdhu naanum ippadithaan seidhu kondirukkiren.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே |
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷான்தேஹீ ச பார்வதி||
மா