முட்டை புளி குழம்பு

தேதி: January 14, 2008

பரிமாறும் அளவு: 3 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

முட்டை - மூன்று
தாளிக்க:
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - இரண்டு
தக்காளி - நான்கு
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்க்ரண்டி
உப்பு - தேவைக்கு
அரைத்து கொள்ள
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஐந்து பல்
வெங்காயம் - ஒன்று


 

மிளகு, சோம்பு, சீரகம், பூண்டு, வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து சிறிது கறிவேப்பிலை போட்டு வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி போட்டு நல்ல வதக்கவும்.
வதங்கியதும் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள்தூள், உப்பு தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கி புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கெட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
நல்ல கிரேவி கொதித்ததும் முட்டையை ஒவ்வொன்றாக ஊற்றவும்.
கரண்டி போட்டு கிண்ட கூடாது இரண்டு நிமிடம் கழித்து லேசா திருப்பி விடனும்.
கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.


அப்படி முட்டையை உடைத்து ஊற்ற விருப்பப்படாதவர்கள். வேக வைத்து முழுசாக ஓரத்தில் மட்டும் நாலு பக்கமும் கீறல் போட்டு தாளிக்கும் முன் எண்ணெயில் வெந்து சைடில் இதை எண்ணெயில் வதக்கி தனியா எடுத்து வைத்து விடுங்கள், பிறகு கிரேவி செய்வது போல் செய்து விட்டு கடைசியில் கொத்தமல்லி தழை தூவும் போது வெந்த முட்டையையும் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அரைத்து கொள்ள என கொடுத்துள்ள பொருட்களில் ஒரு வெங்காயம் என்பது பெரியவெங்காயமா,சின்னவெங்காயமா?
நன்றி

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குழம்பு மேடம். முட்டை குழம்பு எனக்கு எப்பவுமே சரியா வராது. முட்டைய உடைச்சு ஊத்தி இதுவரைக்கும் செஞ்சது கெடையாது. பயந்துகிட்டேதான் இந்த குறிப்பை சென்சு பார்த்தேன். ஆச்சரியமான ஆச்சரியம்!! ரொம்ப நல்லா வந்துச்சு ருசியும் சூப்பர். உங்க ரெஸிபிஸ் எல்லாமே ரொம்ப சிம்பிளாவும் நல்லாவும் இருக்கு. keep it up Madam!!!

மேகலா நீங்க அருசுவைக்கு புதுசா,
(முட்டை புளி குழம்பு)
ஆகா கழ்டபட்டு டைப்பண்ணி ரெஸிபி அனுப்புவதை விட இந்த மாதிரி செய்து பார்த்து சூப்பர் என்பதை பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு அதை படித்து காதால் கேட்கும் போது காதுக்கு இனிமையாக இருக்கு.
நன்றி மேகலா.

ஜலீலா

Jaleelakamal

அறுசுவைக்கு புதுசு இல்ல. நான் அறுசுவையை இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன். தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸியாக இல்லை என்பதால் comments எதுவும் அதிகம் கொடுத்ததில்லை இப்போது கொஞ்சம் ஈசியாக இருக்கிறது. இனி நிறைய feedbacks கொடுக்கிறேன்.

ஹாய் ஜலிலாக்கா,
எப்படி இருக்கீங்க. ரொம்ப பிசியா இருபீங்கன்னு தெரியும்.
இன்னைக்கு உங்க முட்டை புளி குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது. நன்றி வித்யாசமான, சுவையான குறிப்புக்கு. இந்த சுவையான குறிப்புக்கான பரிசு நான் நேரிடையாக கொடுக்க முடியாது இல்லையா, அதனால உங்க பரிசை அட்மினுக்கு அனுப்புகிறேன் வாங்கி கொள்ளூங்கள்.

இப்படிக்கு
இந்திரா

indira

இந்திரா முட்டை புளி குழம்பு செய்து பின்னுட்டம் அது இல்லாம் அட்மிக்கு வேறு அனுப்பி உள்ளீர்கள் ரொம்ப சந்தோஷம்.நானும் என் ரெஸிபிகள் எல்லாம் ஒவ்வொன்றாக போட்டோ எடுத்து அட்மினுக்கு அனுப்பி கொண்டு இருக்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal