பாம்பே சட்னி

தேதி: January 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

து.பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் - 1/2 கப்
கடுகு,உளுந்த பருப்பு - தாளிக்க
கரிவேர்பிளை - கொஞ்சம்
எண்ணெய் - தாளிக்க
உப்பு - சுவைகேர்ப்ப


 

து.பருப்பை நன்கு காய்ந்த கடாயில் ஒரு 2 நிமிடம் வறுத்து(எண்ணெய் விடாமல்) கருகும் முன் நிறுத்தவும்.
பிறகு அதை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை நீளமாக அரியவும்.
தக்காளி சிறுது சிறிதாக அரியவும்.
து.பருப்பு நன்கு ஊறியதும் கழுவி கொள்ளவும்.
மிக்சியில் து.பருப்பு,தேங்காய்,தக்காளி,காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்தம் பருப்பு,கரிவேர்பிளை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றவும்.
கொஞ்சம் நீராக வரும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும்.
சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
நேரம் ஆகா ஆகா கெட்டி படும்.
பச்சை வாசனை போகும் வரை அடுப்பில் இருக்க வேண்டும்.
பச்சை வாசனை போகும் முன்னே சட்னி கெட்டி ஆகி விட்டால் சிறுது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
Semi solid state வந்தவுடன் இறக்கி விடவும்.


இட்லி,தோசைக்கு ஏற்றது.
து.பருப்புகிற்கு பதில் கடலை பருப்பும் உபயோகித்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் RSMV (queen), இன்னக்கி உங்களோட இந்த பாம்பே சட்னி செய்தேன். வித்தியாசமான சுவையில் இருந்தது. தோசை கூட சாப்பிட நல்லாவும் இருந்துச்சு. இதேப் போலதான் மேடம் கடலை பருப்பை எண்ணெயில் வறுத்தும் அரைக்கலாம். உங்களுக்கு மிகவும் நன்றி மேடம். அடுத்து மைதா வடை செய்யலாம்னு இருக்கேன் செய்துட்டு சொல்றேன்.

யாராவது வந்து என்னை கீழ இறக்கி விடுங்கப்பா...பறந்திட்டு இருக்கேன்...ரொம்ப ரொம்ப நன்றி ஹரிகாயத்ரி. என்னோட பாம்பே சட்னிக்கு பின்னூட்டம் கொடுத்தற்க்கு....ரொம்ப encouraginga இருக்கு..மைதா வடையும் செஞ்சு பார்த்து சொல்லுங்க...கிட்ட தட்ட 7-8 மாசம் கழிச்சி அருசுவைய பார்ததா என்னோட குறிப்பிற்கு பின்னூட்டம்...நன்றி.

ஹாய் RSMV, நல்லா இருக்கீங்களா? நான் இத இப்பதான் பார்த்தேனா? என்னங்க இன்னும் பறந்துகிட்டு தான் இருக்கீங்களா? கொஞ்சம் கீழ இறங்கி வாங்க. சாரிங்க நான் இன்னும் அந்த வடை செய்யல நிச்சயம் செய்த அப்பறம் பதில் தரேன். நீங்க ஏன் அறுசுவைக்கே வரதில்ல வாங்க ரொம்ப பிஸியா இருக்கீங்களா?