பீர்க்கங்காய் சைடு டிஷ்

தேதி: January 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கங்காய் - 2
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1/2
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு- சுவைக்கு ஏற்ப
கடுகு,உளுந்த பருப்பு - தாளிக்க
கரிவேர்பிளை - கொஞ்சம்
எண்ணெய் - தாளிக்க


 

பீர்கங்காயை தோலுரித்து 1 centimeter அளவு அரிந்து கொள்ளவும்.
ஒரு சிறிய அலுமினிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்தம் பருப்பு,கரிவேர்பிளை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
தக்காளி வதங்கியதும் பீர்கங்காயை சேர்க்கவும்.
கரண்டி போட்டு ரொம்பவும் வதக்க கூடாது.காய் உடைந்து விடும்.
தண்ணீர் ஊற்ற கூடாது.
மூடி போட்டு ஒரு 3-4 நிமிடம் வேக விடவும்.
திறந்து பார்த்தால் காய் தண்ணீர் விட்டு இருக்கும்.
மிளகாய் தூள்,உப்பு சேர்க்கவும்.
காய் வெந்தவுடன் இறக்கவும்.


பருப்பு சாதத்திற்கு ஏற்றது.தக்காளி சேர்க்காமலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் RSMV, பீர்க்கங்காய் சைடு டிஷ் நேற்று செய்தேன்... தண்ணீர் ஊற்றாமல் தான் பீர்க்கங்காய் சமைக்க வேண்டுமா.. தெரிந்து கொண்டேன்.. மிகவும் நன்றாக வந்தது.சுவையும் அருமை.. சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டாலும் நன்றாக இருந்தது... நன்றிகள் உங்களுக்கு...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ