சிம்பிள் ஆட்டுக்கறி வறுவல்

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கறி - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
நாட்டுத்தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - 1 கைப்பிடி,

தாளிக்க:-
========
எண்ணெய் - 4 தேக்கரண்டி,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
பட்டை, கிராம்பு - சிறிது.


 

தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஆட்டுக்கறியைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறி சேர்த்து வதக்கவும்.
கறி நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
கறி வெந்ததும், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவி தண்ணீர் நன்கு சுண்டிய பின் இறக்கவும்.


சாம்பார், ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம் , இன்று இந்த குறிப்பை செய்தேன்.ஈசியாகவும் , நல்லா சுவையாக இருந்தது. என் ஹஸ்பன்ட் பாராடினார் .உங்கள் குறிப்புக்கு நன்றி.
நான் மல்லி தூள் ( 1) தே/க சேர்த்தேன். மல்லி சேர்க்காமல் செய்தால் இரைச்சியின் பச்சை வாசனை வராதா?? பதில் *தரவும் ப்ளீஸ்.
*****நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.****** அன்புடன் பஜீலா.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அன்பு பஜீலா,
மல்லித்தூள் சேர்க்கலைன்னாலும் இறைச்சி வாசனை வராது. மிளகின் மணத்தோடு மசாலா வாசனை இன்றி நல்லா இருக்கும்.கணவரிடமிருந்து பாராட்டு பெற்றிருக்கிறீர்கள். அப்பறமென்ன? நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.