தக்காளி சந்தவை (காரம்)

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1 கிலோ,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
========
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 5,
தக்காளி - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 2 கரண்டி.


 

சந்தவை செய்ய:
--------------------------
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
கடைசியாக எடுக்குமுன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
எடுத்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.
சந்தவை பிழிவதற்கு என தனியாக ஒரு நாழி விற்கிறது.
இட்லி வெந்ததும், அடுப்பில் வைத்துக் கொண்டே சூடாக நாழியில் இரண்டு இட்லிகளை போட்டு பிழியவும்.
இதே போல எல்லா இட்லிகளையும் பிழியவும். எல்லாமாவிலும் சேவை செய்து கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
===============
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பிழிந்து வைத்துள்ள சந்தவையை உதிர்த்து போட்டு கிளறவும்.லேசாக உப்புத்தூள் தூவவும்.
நன்கு உதிராக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மாவு ரொம்ப கெட்டியாகவோ, தண்ணியாகவோ இருக்கக் கூடாது. இட்லி சூடாக இருக்கும் போதே பிழிய வேண்டும், இல்லையேல் பிழிய கஷ்டமாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்