முட்டை அடை

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 2
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 1 அல்லது 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

முட்டை, எண்ணெய் தவிர மற்ற பொருட்களை அரைக்கவும்.
முட்டையை நன்றாக அடித்து அரைத்த கலவை சேர்த்து கலக்கி ஆம்லெட்டுகளாக சுடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கவிசிவா மேடம் உங்க முட்டை அடை செய்தேன் முன்னவே செய்துட்டேன் ஆனா சொல்லத்தான் முடியல ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. செய்யறதுக்கு ஈஸியாவும் இருந்துச்சு மேடம் ரொம்ப தாங்ஸ் மேடம். உங்க இன்னொரு ரெசிபி செய்தேன் மேடம்.

ஹாய் மொழி எப்படி இருக்கீங்க?கல்யாண கனவு வருதா?பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி.அப்புறம் மேடம்லாம் வேண்டாம்.கவிசிவான்னே கூப்பிடுங்க.சரியா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, இந்த வித்தியாசமான முட்டை அடை பூண்டின் மணத்துடன் மிகவும் நன்றாக இருந்தது. தேங்காய் மட்டும் சேர்க்கவில்லை. இருந்தும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

வின்னி தேங்காய் சேர்க்காமலே முட்டை அடை நல்லா இருந்ததா? ஆஹா இது இவ்வளவு நாள் தெரியாம போச்சே! தேங்காய் சேர்ப்பதால் எப்போதாவதுதான் இதை செய்வேன். இனிமேல் அடிக்கடி செய்யலாம்.நன்றி வின்னி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!