எல்லாரும் எப்படி இருக்கீங்க?

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நான் இந்தியா போய்ட்டு வந்து 2 நாள் ஆகிறது. தளிகா, நர்த்தனா, செல்வி அக்கா, மனோகரி அக்கா, சுபா, ரசியா, ஹேமா, ஜானகி, எல்லாரும் எப்படி இருக்கிங்க? வேற யாரையும் எனக்கு இங்க தெரியாது :( ரொம்ப நாள் ஆச்சு உங்க கூட எல்லாம் பேசி. new year celebrations எல்லாம் எப்படி போச்சு? எனக்கு இந்தியாவில்தான். அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி and my little nephew :)

உங்கள் எல்லாரையும் நான் miss பண்ணினேன். சும்மா உங்க எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்லணும்னு தோணிச்சு அதான் :)

அன்புடன்
உமா

உமா சத்தியமா நூறு ஆயுசு தான் போங்க...என்னால் நம்ப முடீல....இப்ப தான் யோசிச்சேன் உங்களை..நேத்தும் யோசிச்சேன்..சரி இனி வாங்க பேசுவோம்..உடம்பு நல்லா இருக்கா

ஜலிலா உங்க கிட்ட ரொம்ப நாளா கேட்கனும் நினைத்தேன்.எப்பவோ நீங்க kfc சிக்கன் பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் சரியா.உங்களுக்கு தெரியுமா kfc சிக்கன் ஹலால் சிக்கன் இல்லை என்று ஏன் என்றால் நான் kfcல் வேலை பார்த்தேன் அதனால் எனக்கு தெரியும்.அதை தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்
அன்புடன் தீபா

ஹலோ டியர் சிஸ்டர் உமா, ஊரிலிருந்து வந்தவுடன் எங்களை விசாரித்து கேட்டு எழுதியதற்கு மிக்கநன்றி. நான் நலமுடன் இருக்கின்றேன்,மற்ற நேயர்களும் சுகமுடனிருப்பார்கள் என்றே நம்புகின்றேன். நீங்க எப்படி இருக்கீங்க. பயணக் கலைப்பு இன்னும் இருக்கும் தானே!ஊரில் உங்க உற்றார் உறவினர் அனைவரும் நலமா? புது வருட பிறப்பு எப்போதும் போலவே கொண்டாட்டமாக சென்றது.உங்களுக்கும் எனது புதுவருட நல் வாழ்த்துக்கள்.நன்றி.

மனோஹரி மேடம் .. எப்படி இருகிங்க ??
நான் நலம் .. இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து பிரிட்ஜ் ல எத்தனை நாள் வைக்கலாம் ??

டியர் பாலம்மு நல்லது, நானும் நன்றாக இருக்கின்றேன். வீட்டில் அனைவரும் நலம் தானே. இஞ்சி பூண்டு பேஸ்டை ஃபிரஷ்ஷாக நான் கிட்டதட்ட ஒரு மாதம் வரை வைத்திருக்கின்றேன்.நூறு கிராம் பூண்டு நூறு கிராம் இஞ்சி இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அதில் எண்ணெயும் சிறிது தண்ணீரையும் கலந்து மிக்ஸியைக் குறைந்த ஸ்பீடில் வைத்து அரைத்து சிறிய கன்டெய்னரில் போட்டு வைத்து உபயோகிக்கலாம். தனித்தனியாக அரைப்பதாக இருந்தாலும், அரைத்து ஃபிரீஸரில் வைத்திருந்தும் உபயோகிக்கலாம்.இதனால் காலவரையில்லாமல் வைத்திருந்து பயன்படுத்தலாம் கெடாது.

மனோஹரி மேடம் .. நான் ஒரு தடவை செய்து வைத்தேன் .. ஆனால் அது அடுத்த நாள் காலை பச்சை நிறத்தில் இருந்தது .. ஏன் என்று சொல்லுங்களேன் ??
இந்த கொத்தமல்லி இலைகளை எப்படி பிரேஷா வைக்கிறது

மனோகிரி மேடம் ரொம்ப நாளா ஆளையே காணோம். ரொம்ப பிஸியா? வீட்டில் அனைவரும் நலமா? குறிப்புகள் தேர்ந்து எடுக்க முடியாததுற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் வேலையின் மத்தியிலும் எங்களுக்கு வந்து உங்கள் குறிப்புகள், டிப்ஸ் கொடுத்து விட்டு போகவும். டைகர் எப்படி உள்ளான்?

ஜானகி

நலம். நீங்கள் நலமா? பையன் நலமா? எப்படி இருந்த்து இந்தியா பயணம்? பையன் நல்லா எனஜாய் பண்ணினா? இந்தியாவில் அனைவரும் நலமா? புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜானகி

நீங்க நினைச்சீங்க நான் வந்திட்டேன் :) ஊர் நல்லா இருந்தது. ரொம்ப அலைச்சல் எல்லாம் இந்த தடவை வைத்து கொள்ளவில்லை. ஒரே ட்ரிப் மைசூர் அப்பறம் ஊட்டி, சேலம் போய்ட்டு வந்தோம். ஊட்டியில் எனக்கும் என் பையனுக்கும் செம்ம food poisoning ஆகி விட்டது. எப்படி மலை இறங்கி வந்தோம் என்றே இன்னும் தெரியவில்லை.

என் சகோதரி(first cousin) கோயம்புத்தூர் இல் இருக்கிறாள். அவளை நான் மட்டும் flight பிடித்து போய் பார்த்து விட்டு வந்தேன். அவளுடன் இருந்த அந்த 2 நாட்கள் அப்பப்பா :) பழைய கதை எல்லாம் பேசி தீர்த்தோம். மிக மிக சந்தோஷமான நாட்கள். அவை திரும்பி வராதா என்று இருந்தது எங்கள் இருவருக்கும். *sigh* எல்லாருக்கும் ஊருக்கு சென்றாலே ஒரு nostalgic feeling என்று சொல்வோமே அது வருமோ? எனக்கு ரொம்பவே வந்தது :( எல்லாம் இன்னும் குறைந்தது 2 வருடங்களுக்கு மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான்.

ரீமா குட்டி எப்படி இருக்கிறாள்? பாட்டு dance எல்லாம் குட்டி ராணிக்கு எப்படி போகிறது? :)

அன்புடன்
உமா

பயண களைப்பு இன்னும் இருக்கிறது. இரவில் 3 மணிக்கு பிறகு தான் தூக்கம். காலை 10 மணிக்கு எழுந்து கொண்டு இருக்கிறேன். பையனுக்கு மட்டும் காலை தூக்கம் முழித்து கொள்கிறான் grrrrrrr அவனால் நானும் எழுந்து கொள்ளவேண்டி இருக்கிறது! என் உறவினர் அனைவரும் நலம் :) கேட்டதற்கு மிகவும் நன்றி :) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் (tiger உள்பட) என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்