சாதனையாளர் திருமதி சுபாஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அறுசுவையில் மிக குறுகிய காலத்தில் மிக அதிகமான குறிப்புகளை வழங்கிய முதல் சாதனையாளராகிய திருமதி சுபா அவர்களே வாழ்த்துக்கள். நான்கு சதங்களைத் தொடர்ந்து அடித்து மிகப் பெரிய சாதனைப் புரிந்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அதிலும் உங்கள் குறிப்புகளில் இருக்கும் எளிமையும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் இருக்கும் செய்முறைகளும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.இவ்வாறு தொடர்ந்து பல நூறு சதங்களைத் தொட வேண்டும் என்று கூறி,மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விடைப் பெறுகின்றேன்.நன்றி.

Congrats Suba, it's a good feast for me to do your Recipes, Thanks.

பல புத்தகங்களை புரட்டி தேட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லாவற்றையும் எங்களுக்காக தேடி எடுத்து தொகுத்து ஒரே இடத்தில் அளித்துவரும் இந்த சேவைக்கு வாழ்த்துக்கள் :-) இன்னும் இன்னும் பல குறிப்புகள், உனக்கு கிடைக்க வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சுபா நாலாவது சென்ட்சுரி அடித்தற்கு வாழ்த்துக்கள். எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர். தினமும் ஒரு சமையல் செய்து அசத்தி விடுவீர்கள் என்று நினைக்குறேன். இன்னும் பல சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

ஜானகி

ஹாய் சுபா,
இப்போது தான் 300 குறிப்புகள் கொடுத்ததற்க்கு வாழ்த்தின மாதிரி இருந்தது.அதுக்குள்ள 400 குறிப்புகள் கொடுத்து அசத்திட்டீங்க.நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்களுக்கு எப்படியாவது இன்றைக்கே சீக்கீரமா கண்டிப்பா வாழ்த்து அனுப்ப பல முறை அறுசுவையில் உள்நுழைந்து இதை டைப் பண்ணி உள்ளேன்.வாழ்த்துக்கள்.

இப்போதுதான் உங்களுக்கு triple century அடித்ததற்கு வாழ்த்து சொன்னேன். அதற்குள் fourth century ah?? மனோகரி அக்கா சொன்ன மாதிரி உங்கள் குறிப்புகள் எல்லாம் மிக மிக சுலபம் ஆக (என் போன்றவர்கள் கூட விரைவில் செய்யும்படியாக) இருப்பது தான் speciality :) இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க advance wishes!!!

அன்புடன்
உமா

ஹையோ...கலக்கரீங்கப்பா...என்ன ஒரு வேகம் ...
வாழ்த்துக்கள்.

இப்ப தான் உங்களுக்கு வாழ்த்து சொன்ன மாதிரி இருக்கு. இவ்வளவு வேகமா இருக்கிங்க அதுக்குள்ள 401 குறிப்புகள் கொடுத்திடிங்க, வாழ்த்துக்கள் சுபா, மேலும் பல குறிப்புகள் கொடுக்க என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

வாழ்த்துக்கள் சுபா.400 குறிப்புகள் யம்மாடியோவ்.திருஷ்டி சுத்தி போடுங்க சுபா.அதோட சீக்கிரமா 400 ஐ 500 ஆக்கிடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுபா எப்படி இவ்வளவு குறிப்பை கொடுக்கரீங்க??எனக்கு ஒன்னும் நியாபகத்தில் வரமாட்டீங்குதே...அன்னன்னக்கி செய்யும்போது தான் வந்து குறிப்பு போடுவேன்..இதெல்லாம் உங்கம்மா சமையலா இல்ல உங்க சமையலா?வாழ்த்துக்கள் சுபா

தளிகா:-)

சுபா,
கவிதை கண்ணம்மா,

என்ன உங்க கையில் ஏதும் மாய மந்திர கோல் வைத்து டைப்பண்ணுகிறீர்களா?ஆ ஆ ஆ

அப்படியா..... நம்பவே முடிய வில்லையே......
குறிப்புகள் அருமை & ஈசி.

என்ன மைதா மாவு பிஸ்கேட்டில் ஓமத்தை வருத்து பொடிக்க வேண்டாமா, இல்லை அப்படியே போடனுமா?

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்